states

img

அம்பானியின் வன விலங்குகள் மையத்தில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

அம்பானியின் வன விலங்குகள் மையத்தில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 3,000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் “வன்தாரா” என்ற பெயரில் வன விலங்குகள் மீட்பு மறுவாழ்வு மையம் உள்ளது. இது பிரதமர் மோடிக்கு நெருங்கிய நண்ப ரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்குச் சொந்தமானது ஆகும். இந்நிலையில், இந்த வன்தாரா விலங்குகள் நலவாழ்வு மையத்தில் அழிவின் விளிம்பில் இருக்கக்கூடிய பல்வேறு உயிரினங்கள் சட்ட விரோத மாக கடத்தல் மூலம் வளர்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை கைப்பற்றி வனத்தில் சுதந்திரமாக விடுவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஜெய்சுகின் வழக்கு  தொடர்ந்தார். இந்த வழக்கு திங்களன்று உச்சநீதி மன்ற நீதிபதிகள் பங்கஜ் மித்தல், பிரசன்னா பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  இருதரப்பு வாதத்திற்குப் பின் உச்சநீதிமன்ற நீதிபதிகள்,”யானைகளை சட்டவிரோதமாக சிறைபிடித்தது மற்றும் பிற குற்றச்சாட்டுகளை விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல மேஷ்வர் தலைமையில் ஒரு சிறப்பு  விசாரணைக் குழுவை (SIT) அமைக்க வேண்டும்” என ஒன்றிய அரசுக்கு உத்தர விட்டுள்ளனர். மேலும் இந்த வழக்கில் செப்டம்பர் 12ஆம் தேதிக்குள் சிறப்பு விசாரணைக் குழு விசாரணை அறிக்கை யை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.