states

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் பெரும் முறைகேடு

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில் பெரும் முறைகேடு

இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி களில் “வெளிநாட்டு வாழ் இந்தி யர்களுக்கு (என்ஆர்ஐ)” குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்கப்படுகிறது. இந்த  என்ஆர்ஐ கோட்டாவில் தனியார் கல்லூ ரிகளில் போலி ஆவணங்கள் மூலம் 18,000 சேர்க்கை பதிவாகியுள்ளது அம லாக்கத்துறை விசாரணையில் அம்பல மாகி உள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் என்ஐஆர் ஒதுக் கீட்டில் முறைகேடாக மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள் ளது. மேலும் இரண்டு மாநிலங்களிலும் தனியார் கல்லூரிகளில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் போலி என்ஆர்ஐ சான்றிதழ்களும் சிக்கியுள் ளன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வங்கியில் வைத் துள்ள வைப்பு தொகை ரூ.6.42 கோடியையும், நாடு முழுவதும் சில தனியார் கல்லூரிகளின் ரூ.12.33 கோடியையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.