5.26 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ரூ.1,200 ஓணம் பரிசு கேரள அரசு அறிவிப்பு
கேரளத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற வேலை வாய்ப்பு உறுதித் திட்டதொழி லாளர்களுக்கான அரசின் ஓணம் பரிசாக தலா ரூ.1,200 அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 5,25,991 தொழிலாளர்கள் பயனடைவார்கள் என அம்மாநில நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”ஓணம் பரிசு விநியோகத்தி ற்காக கிராமப்புற வேலைவாய்ப்பு உறு தித் திட்ட தொழிலாளர்களுக்கு ரூ.51.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் 100 வேலை நாட்களை நிறைவு செய்த 5,19,623 பேர் இதன் மூலம் பயனடைவார்கள். மாநில அரசால் செயல்படுத்தப்படும் அய்யன்காளி நகர்ப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், கடந்த நிதியாண்டில் குறைந்தது 100 நாட்கள் பணியாற்றிய 6,368 தொழிலாளர்களுக்கும் ஓணம் போனஸ் வழங்கப்படுகிறது. இதற்காக ரூ.63.68 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தெரிவித்துள்ளார்.