மோடி அரசு நேர்மையாக நடந்து கொள்ளாது நாடாளுமன்ற கூட்டுக் குழுவிலிருந்து 4 ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் விலகல்
வாக்குத் திருட்டு குற்றச் சாட்டை மூடி மறைக்க வும், நாட்டில் எதிர்க் கட்சிகள் இல்லாத சூழலை கொண்டு வரவும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி தரு ணத்தில் அரசியலமைப்பு 130ஆவது திருத்த மசோதா, 2025 தொடர்பான அறிவிப்பை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் வெளியிட்டார். மசோதாவின் படி, ஒரு அமைச்சர் ஊழல் அல்லது கடும் குற்றச் செயல் களுக்காக கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து காவலில் வைக்கப் பட்டாலோ 31ஆவது நாள் முதல மைச்சர் பரிந்துரையின் பேரில், அவரை அமைச்சரவையில் இருந்து மாநில ஆளுநர் நீக்க வேண்டும். ஒரு வேளை ஆளுநருக்கு பரிந்துரை செய்யவில்லை என்றால், தானாகவே 31ஆம் நாளில் அவர் பதவியை இழந்து விடுவார். இது பிரதமர், முதலமைச்சருக்கும் பொருந்தும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா அடுத்த குளிர்கால கூட்டத்தொடரில் அல்லது சிறப்பு கூட்டத்தொடரில் மீண்டும் தாக் கல் செய்யும் வகையில் நாடாளு மன்ற கூட்டுக் குழுவின் (ஜேபிசி) ஆலோசனைக்கு அனுப்பப் பட்டுள்ளது. இந்நிலையில், இந்த பதவி நீக்க மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழுவை (ஜேபிசி) புறக்க ணிக்கும் முடிவை “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் அடுத்தடுத்து அறிவித்து வருகின்றன. இதுவரை திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, சிவசேனா (உத்தவ்) உள்ளிட்ட “இந்தியா” கூட்டணி கட்சி கள் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆலோ சனையில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளன. அதே போல ராஷ்டிரிய ஜனதா தளமும் (ஆர்ஜேடி) விலகக்கூடும் என அக்கட்சி யின் வட்டாரங்கள் அறிவித்துள்ளன. காங்கிரஸ் மேலும் காங்கிரஸ் கட்சியின் ஒரு பகுதியினர் பதவி நீக்க மசோதா வின் ஜேபிசி கூட்டத்தை புறக்க ணிக்க வேண்டும் என கட்சித் தலை மையை வற்புறுத்தி வருவதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சி ஜேபிசி தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.