வாலிபர் சங்க மாநில மாநாட்டு இலச்சினை வெளியீடு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 18 ஆவது மாநில மாநாடு ஓசூரில் அக்டோபர் 12 முதல் 14 வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான இலச்சினை திங்களன்று கோவையில் வெளியிடப்பட்டது. சங்கத்தின் மாநிலத்தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், பொருளாளர் எஸ்.பாரதி உள்ளிட்டோர் இலச்சினையை வெளியிட்டனர்.