வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி
சென்னை, ஆக. 26 - வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது, மேற்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 2 நாட்களில் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக் கையில் தெரிவித்திருக்கிறது. நீலகிரி-கோவையில் கனமழை வாய்ப்பு இதனிடையே ஆகஸ்ட் 27, 28, 29 ஆகிய மூன்று நாட் களுக்கு நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங் களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வும் கூறப்பட்டுள்ளது.