tamilnadu

img

செல்போனில் தரவுகள் சேகரிப்பதை கைவிடக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

செல்போனில் தரவுகள் சேகரிப்பதை கைவிடக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

சென்னை, ஆக.22 - ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில் (ஐசிடிஎஸ்) பணியாற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், 6 மாதம் முதல் இரண்டு வயது வரை உள்ள குழந்தை களுக்கு இணை உணவு வழங்குகின்றனர். இதற்கு செல்போன் மூலம் பயனாளிகளின் முகப்பதிவு போட்டோ பதிவு செய்ய வேண்டும் என்ற முறையை அறி முகப்படுத்தி உள்ளது. இதில், ஏராளமான நடைமுறை சிக்கல்கள் நிலவுகிறது. அங்காடி மையங்களில் குழந்தைகளுக்கு முன் பருவக் கல்வி நடத்துவதில் தொய்வு ஏற்படுகிறது. இந்த பணிகளை செய்வ தற்கான அலைபேசி வழங்காத சூழலில், தரவுகளை அளிப்பதில் சிரமம் உள்ளது. எனவே, இந்த முறையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வலியுறுத்தி அகில இந்திய அளவில் ஆக.21ந் தேதியை அங்கன்வாடி ஊழியர்கள் கருப்பு தினமாக கடைபிடித்தனர். அனைத்து வட்டார, ஒன்றிய அலுவலகங்கள் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.