நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு
ராணிப்பேட்டை, ஆக 22 - நெமிலி ஊராட்சி ஒன்றியம், மேல்களத்தூர் ஊராட்சியில் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான 15வது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து ரூ. 1.26 கோடி மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு வெள்ளியன்று (ஆக 22) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து நெமிலி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பெ. வடிவேலு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயஸ்ரீ (வ.ஊ), சிவக்குமார் (கி.ஊ), மேல் களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா, செல்வமந்தை ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், மேலேரி ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.