tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

ரூ. 2 லட்சமாக இழப்பீடு உயர்வு

சென்னை, ஆக. 22 - நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வழ ங்கப்படும் விபத்து மரண இழ ப்பீட்டு தொகையை ரூ. 1  லட்சத்திலிருந்து ரூ.2லட்ச மாக உயர்த்தி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள் ளது. மேலும், விபத்தினால் ஏற்படும் உடல் உறுப்பு இழப்புக்கான தொகை ரூ.20 ஆயிரத்திலிருந்து ரூ.1  லட்சமாகவும், இயற்கை மர ணத்துக்காக வழங்கப்பட்டு வரும் நிதி உதவி ரூ. 20 ஆயிரத்திலிருந்து ரூ. 30 ஆயிரமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஊரக தூய்மைப் பணியாளர்க்கு வார விடுமுறை

சென்னை, ஆக. 22- ஊராட்சிகளில் வீடு, வீடா கக் குப்பைகளைச் சேகரிப்ப தற்காக வெளி நிரவல் முறை யில் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அல்லது ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கள் மூலம் தூய்மைக் காவ லர்கள் பணியில் ஈடுபடுத்தப் படுகின்றனர். இந்நிலையில், இந்த தூய்மைக் காவலர் களுக்கு சுழற்சி முறையில் வாரத்திற்கு ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என் றும், இதற்கு கூடுதலாக விடுப்பு எடுப்போருக்கு ஒரு நாள் ஊதியமாக ரூ.160 பிடி த்தம் செய்யப்பட வேண்டும் எனவும் ஊரக வளர்ச்சித் துறை தெரிவித்துள்ளது.