articles

img

செங்கோலும் கன்னக்கோலும் வல்லம் தாஜுபால்

செங்கோலும் கன்னக்கோலும்

சந்தேகம் – தேர்தல் வாக்குறுதியில் வரலாம்... தேர்தல் ஆணையம் மேல் வரலாமா?   மோசடிகளை - வெளிப்படுத்துவது விசாரணைக் கமிஷன் அமல்படுத்துவது தேர்தல் கமிஷன்  இருக்கிறது – நாடாளு மன்றத்தில் செங்கோலும் தேர்தல் ஆணையத்தில் கன்னக்கோலும்!   ஒரு மரம் வெட்டினால் பத்து மரக்கன்று வை என்பது வனத்துறை லட்சம் உண்மை வாக்காளரை நீக்கினால் கோடி போலிகளை இணை என்பது உள்துறை  அதுசரி... இல்லாத ரயில்வேயில் தேநீர் விற்கலாம் இல்லாத பல்கலை.யில் பட்டம் பெறலாம் இல்லாத நிறுவனத்தில் பங்கு வாங்கலாம் இல்லாத பெயரை இணைக்கக் கூடாதா?  ’கூலி’ எனப் பெயரிட்ட திரை இயக்குநர் தேர்தல் ஆணையம் பற்றி எடுத்தால் ‘போலி’ என வைத்திருப்பார்...  தேர்தல் ஆணையத்தின் லோகோவாய் தாயக் கட்டையைத் தரலாம்... என்னா உருட்டு உருட்டுகிறார்கள்!