articles

img

சாதிப்பாகுபாடுகளை தோலுரிக்கும் பட்டாங்கில் உள்ளபடி இலமு

சாதிப்பாகுபாடுகளை  தோலுரிக்கும்  பட்டாங்கில் உள்ளபடி

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 5 ஆவது மாநில மாநாடு மயிலாடுதுறையி ஆக.31, செப்.1 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த  மாநாட்டையொட்டி வீதி நாடக இயக்குநர் பிரளயனின்  சென்னைக் கலைக்குழுவும் புயல் தப்பாட்டக்குழுவும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.சிலதினங்களுக்கு முன்பு திண்டுக்கல் வந்திருந்த போது, பட்டாங்கில் உள்ள படிஎன்ற நாடகமும், வள்ளலாரின் கதையும் நடிக்கப் பட்டன. தப்பாட்டமும், மேளச்சத்தமும் பார்வையாளரை இழுத்தது. நாயும், கழுதையும் நடக்கிற தெருவில நாங்க  நடந்தா தப்பாடா, பாம்பும்தவளையும் நீந்துற குளத்தில  தண்ணி குடிச்சா தீட்டாடா என்ற மரியடேவிட்டின்பாட லுடன் நிகழ்ச்சி துவங்கியது. பாடலுக்கேற்ற இசை யைக் கேட்டதும் கூட்டம்திரள ஆரம்பித்தது. ஏதோ புதி தாக சொல்ல வருகிறார்கள் என்று மக்கள்கவனிக்கத் தொடங்கினர். ஒளவையின் வார்த்தைகளான ‘பட்டாங்கில் உள்ளபடி’ என்ற தலைப்பில் சென்னைக் கலைக்குழுவின் வீதி நாடகம் அரங்கேறியது.

சாதி ஆதிக்கசமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். கிராமத்தில்தலித் ஒருவர்  இறந்து போக, அவரது பிணத்தை அடக்கம் செய்ய எடுத்துச்செல்லபாதை இல்லாமல் அப்படியே பிணத்தை எடுக்காமல் வீட்டிலேயே 2 நாட்களுக்குமேலாகியும் அழுகும் நிலையில் வைத்துக்கொண்டு தலித் மக்கள்  பாதை கேட்டுபோராடுகிறார்கள். இன்னொரு பக்கம்  சாதி ஆதிக்க சமூகத்தினர்  தங்கள் ஊர் வழியாக பிணத்தை எடுத்துச்செல்லக்கூடாது என்று கூறி மறியல்  போராட்டத்தில்ஈடுபட்டு வருகிறார்கள். நடக்கவே முடியாத ஒரு பாட்டியையும் அழைத்து வந்து மறியல்போராட்டத்தில் கலந்து கொள்ள வைக்கி றார்கள். அந்த ஊராட்சியின் தலைவர்ஆதிக்க சமூ கத்தைச் சேர்ந்தவர்.

அவரது மாமனார் மற்றும் அவரது  உறவினர்கள்இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். 24 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளஅந்த பொணம் நாத்த மடிக்க ஆரம்பிச்சிரும் என ஒருவர் சொல்ல. ஆமா, அந்த  நாத்தம் நம்ம ஊட்டுக்குத் தான் வரும் என்று இன்னொரு வர் சொல்ல, இப்படியே நாடகம் நகர்கிறது. ஏன் எதுக்கு  என்று கூட தெரியாமல் அந்த மறியல்போராட்டத்தில் பலர் அமர்ந்திருக்கிறார்கள்.  தலித் மக்கள் தங்கள் பிணத்தைஎடுத்துக்கொண்டு இந்த சாலையை கடந்து போகப் போகிறார்கள். இதில்  நமக்கு என்ன வந்தது என்று தலித் மக்களுக்கு ஆத ரவாக பேசுகிறவர்களும் அந்த மறியல்போராட்டத்தில் இருக்கிறார்கள்.  அதேநேரம், ஆமா ஆமா இவங்க பிணத்தை நம்ம  ரோடு வழியாஅனுப்பக்கூடாது என்று ஒருவர் சொல்ல,  ஏன் என்று மற்றவர் கேட்க இன்னொருவர் எழுந்து  வந்து அன்னிக்கி நான் டாஸ்மாக்கில் சரக்கடித்துக் கொண்டு மீன் துன்னுட்டு இருந்தப்ப என் பக்கத்துல வந்து சமமா உட்காருராம்பா என்கிறார்.

தனித்தனி சுடுகாடு  கேட்கலாம், தனித்தனி டாஸ்மாக் கேட்க முடியாதுல்ல என்று ஒருவர்சொல்கிறார். கும்பல் கும்பலா பழனிக்குப் போறோம், திருப்பதிக்கு  போறோம். பஸ்சுலபோறோம். அப்பல்லாம் அவங்க நாம்  என்று பிரிச்சு பேசுறோமா? ஊருல மட்டும்ஏன் பிரிச்சு போசுறீங்க என்று சிலர் தலித் மக்களுக்கு ஆதரவாக பேசுகின்றனர். அப்போது, இவ்வளவு பேசுறவரு இவர்  பொன்ன அவங்களுக்கு கட்டிக்கொடுக்க வேண்டியது தானே என்று சொல்ல, அட என் பொன்னு நர்சிங்  ஃபைனல் இயர் படிக்குது. அவபடிச்சு முடிச்ச பிறகு அப்பா அப்பா நான் இவரத்தான் கட்டிக்குவேன் என்று  சொன்னால் அதுக்கு நான் குறுக்க நிக்க மாட்டேன். அந்த  பையன் எந்த சாதியாக இருந்தாலும் சரி என்று சொல்கி றார்.

உன் பொன்னு உனக்கு பொறந்திருக்கலாம், ஆனால் அந்த பொன்னு எங்க குலம். எங்க சொத்து  சும்மா விட்டுவிடுவோமாடா என்று சொல்லி ஒரு வருக்கொருவர் தகராறில் ஈடுபட பிரச்சனை ஆகி  தலித் மக்களுக்கு ஆதரவாக பேசியவர்கள் மறியலிலி ருந்து வெளியேறிச் செல்கின்றனர். இதனையடுத்து அந்த இடத்திற்கு போலீஸ் வருகிறது. காவல்துறை அதிகாரி அந்த ஊர்மக்களிடம் பேசுகிறார். இந்த பிரச்சனை 24 மணி நேரத்திற்கும் மேலாகி உள்ளது. தலித் பிணம் அழுகி வருகிறது. எனவே அதனை நல்லடக்கம் செய்யவேண்டும். ஏற்கெனவே முதல்வர் கவனத்திற்கு சென்றுவிட்டது. பிரஸ், மீடியாஎன்று எல்லோரும் இது பற்றி எழுத ஆரம்பித்துவிட்டார்கள் என்று போலீஸ்அதிகாரி ஆதிக்க சமூகத்திடம் பேசி பார்க்கிறார்.

 இந்த ஊராட்சி 100 நாள் வேலைத் திட்டத்தை செயல்படுத்துவதில், சுகாதாரத்தை பாதுகாப்பதில் சிறப்பான ஊராட்சியாக உள்ளது. இந்த ஊராட்சிக்கு என்று உள்ள நல்ல பெயரை கெடுக்கவேண்டாம் என்று  வருவாய் அதிகாரி சொல்கிறார். அந்த ஊராட்சியின்  தலைவரை வரச்சொல்லி காவல்துறை அதிகாரிகளும்,  வருவாய்த்துறை அதிகாரிகளும் பேசிப் பார்க்கிறார்கள்.  ஊராட்சித் தலைவர் (பெண்). அவரது மாமனார் வார்த்தையைமீறி என்னனால் எதுவும் செய்ய முடி யாது என்று சொல்கிறார். இதையடுத்து காவல்துறை அதிகாரிகளும், வருவாய்த்துறை அதிகாரிகளும் தலித் பிணத்தை அந்த சாலைவழியாக எடுத்துச்சென்று அடக்கம் செய்ய முடிவு செய்கின்றனர்.  அப்போதுமறியல் போராட்டத்தில் அமர்ந்திருந்த பாட்டிக்கு திடீரென்று சாமிவருகிறது. காவல்துறை அதிகாரியாக உள்ளவரும் பெண். சாமியாடிய பெண்ணைப் பார்த்து காவல்துறை அதிகாரி பெண்,  ஒரு அரட்டு அரட்டியவுடன் அவர் அமைதியாகி விடுகிறார்.

இதனையடுத்து தலித் பிணம் ஆதிக்க சமூகம் உள்ள சாலை வழியாக எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.போலீஸ் அதிகாரியாக வந்த  பெண்ணும், வருவாய்த் துறை அதிகாரியாக வந்த பெண்ணும் பிணத்தை தூக்கிச்செல்வது போன்ற காட்சி  அமைந்தது.  இந்த நாடகத்தில் வருவது போல ஒவ்வொரு  காவல்துறை அதிகாரியும், வருவாயத்துறைஅதி காரியும் இருந்துவிட்டால் கிராமப்பகுதியில் சாதிய ஒடுக்குமுறையாளர்களிடமிருந்து தலித் மக்களை பாதுகாக்க முடியும். ஆனால் காவல்துறையிலேயே சாதிய பாகுபாட்டுடன் உள்ள அதிகாரிகளால் தான் சட்டத்தை நிலைநாட்ட முடியாத நிலை உள்ளது.  மேலும் இந்த சம்பவம் திண்டுக்கல் அருகேயுள்ள பூதிபுரத்தில் தலித் ஒருவர் இறந்த போது அந்த ஊர்மக்கள் அந்த பிணத்தை தங்கள் ஊர் வழியாக எடுத்துச்செல்ல அனுமதி மறுத்த போது,அன்றைக்கு சிபிஎம் தலைவர் ஏ.பாலசுப்ரமணியன் அந்த தலித் பிணத்தைதூக்கிச்சென்று அடக்கம் செய்தார். அந்த காட்சியை நினைவுபடுத்துவதுபோலிருந்தது இந்த நாடகம்.

 இந்த நாடகத்தில் காவல்நிலையத்தில் தலித் வகுப்பைச் சேர்ந்த ஒருவர் சாதி ஆதிக்க சமூகத்தின ரால் தாக்குதலுக்கு ஆளானதையடுத்து புகார் கொடுக்க வருகிறார். அந்த புகாரை எஸ்.சி, எஸ்.டி.  வன்கொடுமை வழக்காகபதியாமல் சாதாரண வழக்காக  பதிந்துள்ள தலைமைக்காவலர் மற்றும் சப்இன்ஸ்பெக்ட ருக்கு எதிராக டி.எஸ்.பி. (பெண்), உரிய எப்.ஐ.ஆர். பதிய  வேண்டும் என்று வலியுறுத்துகிற காட்சிகள் இருந்தன. மொத்தத்தில் சென்னைக் கலைக்குழுவின் நாடகம்  தலித் மக்களின் பிரச்சனைகளை சொல்கிறது. பட்டாங்கில் உள்ளபடி நாடகம் பார்வையாளரை கட்டிப்போட்டது என்றால் அது மிகையல்ல.