articles

img

யானை க சண்முக சிதம்பரம் தரகம்பட்டி

யானை! 

க.சண்முக சிதம்பரம், தரகம்பட்டி

யானை பெரிய யானையாம்       அசைந்து செல்லும் யானையாம்! தூணைப் போன்ற கால்களைத்       தூக்கி நடக்கும் யானையாம்!  பானை போன்ற வயிற்றினால்       பாரம் சுமக்கும் யானையாம்! மீனைப் போன்ற கண்களால்      மிடுக்காய்ப் பார்க்கும் யானையாம்!  வானை நோக்கிப் பிளிறியே      வந்து நிற்கும் யானையாம்! சேனை தன்னில் சிறப்புடன்      சேவை செய்யும் யானையாம்!  முறத்தைப் போன்ற காதுகள்       முன்னும் பின்னும் அசைந்திடும்! மரத்தை முறித்துப் போட்டிடும்        மகிழ்ந்து தழையை உண்டிடும்!  தும்பிக் கையால் பொருள்களைத்       தூக்கிச் செல்லும் யானையாம்! நம்பிக் கையாய் நம்மையும்       நாடி வாழும் யானையாம்!