அனில் அம்பானிக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் விளம்பர இயக்குந ராக இருப்பவர் அனில் அம்பானி. இவர் கடன் மூலமாக “ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் (எஸ்பிஐ)” ரூ.2,000 கோடிக்கும் அதிகமான அளவில் இழப்பை ஏற்படுத்தியதாக கடந்த ஜூன் மாதம் எஸ்பிஐ வங்கி நிர்வா கம், ரிசர்வ் வங்கிக்கு அறிக்கை அனுப்பி யது. இதனை தொடர்ந்து அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து, சம்மன் மூலம் நேரடி விசாரணை நடத்தியது. இந்நிலையில், எஸ்பிஐ வங்கி மோசடி தொடர்பாக சனிக்கிழமை அன்று அனில் அம்பானிக்குச் சொந்தமான இடங்களில் மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) அதிகாரிகளும் சோதனை நடத்தினர். சோதனை மாலை வரை நீடித்தது. ஆனால் கைப்பற்றப்பட்ட ஆவ ணங்கள் தொடர்பாக எவ்வித தகவ லும் வெளியாகவில்லை.