states

img

பீர்மேடு எம்எல்ஏ  வாழூர் சோமன் மறைவு

பீர்மேடு எம்எல்ஏ  வாழூர் சோமன் மறைவு

கேரள முதலமைச்சர் அஞ்சலி - இரங்கல்

திருவனந்தபுரம் சிபிஐ அலுவலகத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் வாழூர் சோமன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச்  சேர்ந்த பீர்மேடு சட்டமன்ற உறுப்பினர் வாழூர் சோமன் (72) வியாழக்கிழமை அன்று திருவனந்த புரத்தில் உள்ள மருத்துவமனையில் உயி ரிழந்தார். சபாநாயகர் ஏ.எம்.ஷம்சீர், அமைச்சர்கள் கே.ராஜன் மற்றும் ஜி.ஆர்.அனில் ஆகியோர் மருத்துவமனையில் உடன் இருந்தனர். முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், வாழூர் சோமன் மறை வுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜ யன் வெளியிட்ட இரங்கல் செய்திக் குறிப்பில், “தொழிலாளர்களின் உரிமை களுக்காக போராடிய சோமன் தொழிற் சங்க இயக்கத்தின் மூலம் உயர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவும், சிபிஐயின் முக்கிய தலைவராகவும் இருந்தார். சட்ட மன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் பிரச்சனைகளில் தலையிட்டு தீர்வு  காண்பதில் அவரது பாணி முன்மாதிரி யாக இருந்தது. ஒரு தொழிலாளர் தலை வராக தொழிலாளர் உரிமைகளுக்காக சமரசமின்றி  போராடிய ஒரு தலைவர் வாழூர் சோமன்” என அவர் கூறினார். 2021 தேர்தலில் காங்கிரஸின் சிரியாக் தாமஸை 1,835 வாக்குகள் வித்தியா சத்தில் தோற்கடித்து வாழூர் சோமன் வெற்றி பெற்றார். இடுக்கி மாவட்டத்தில் தோட்டம் தொழிலாளர்களின் உரிமை களுக்கான போராட்டங்களின் மூலம் ஏஐடியுசி மாநில துணைத் தலைவராக உயர்ந்தவர் வாழூர் சோமன். அவரது இறுதி நிகழ்ச்சிகள் வண்டிப்பெரியாரில் வெள்ளியன்று மாலை நடைபெற்றது. வாழுர் சோமனுக்கு பிந்து என்ற மனை வியும் இரண்டு மகன்களும் உள்ளனர். லூலாவுடன் பயின்ற சோமன் கேரள மாநிலத் திட்டமிடல் வாரிய உறுப்பினரான ஆர்.ராம்குமார் தனது முகநூலில் கூறுகையில், “தோழர் சோமன் நீண்ட காலமாக மாஸ்கோவில் (ரஷ்ய தலைநகர்) படிப்பதற்காக தங்கி இருந்தார். அவர் அங்குள்ள விவசாய முறைகள், பிரச்சனைகள் பற்றியும் நிறையப் பேசுவார். ஒருமுறை மாஸ்கோவில் என்னுடைய வகுப்புத் தோழரும் விடுதித் தோழரும் யார் என்று உங்களுக்குத் தெரியுமா? என்ற கேள்வி க்கு, அவர் அளித்த பதில்,”லூயிஸ் இனா சியோ லூலா டா சில்வா (பிரேசிலிய ஜனாதிபதியான லூலா) என்று கூறினார்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.