சென்னையில் தூய்மைப் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், கண்ணகி நகரில் இன்று அதிகாலை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி (30), தெரியாமல் மழை நீரில் அறுந்து கிடந்த மின்சார கேபிள் மீது கால் வைத்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதை அடுத்து வரலட்சுமியின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.