tamilnadu

விஜய்யின் பேச்சு தரமற்றது பெ சண்முகம் கண்டனம்

விஜய்யின் பேச்சு தரமற்றது

சென்னை, ஆக. 22 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், சமூகவலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அதில், “தவெக மாநாட்டில் அதன் தலைவர் விஜய், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை ‘அங்கிள்’ என்று அழைத்தது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாத அரசியல் அற்ற வார்த்தை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “கொள்கை அடிப்ப டையில் விமர்சிப்பதற்குப் பதிலாக தரம் தாழ்ந்த முறை யில் அவ்வாறு பேசியது கண்டி க்கத்தக்கது. நடிகர் என்ற நிலை யில் இருந்து, அவர் தலைவர் என்ற நிலைக்கு இன்னும் உயர வில்லை என்பதையே அவரு டைய உரை வெளிப்படுத்து கிறது” என்றும் பெ. சண்முகம் விமர்சித்துள்ளார்.