சமாஜ்வாதி எம்.பி., பக்ருல் ஹாசன்
பாஜகவிற்கு ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லை. அதனால்தான் மக்களுக்கு அரசியலமைப்பு வழங்கியிருக்கும் உரிமைகளை பறிக்க துடிக்கிறார்கள். அரசியலமைப்பை நாடாளுமன்றம் மூலம் மாற்ற முடியவில்லையே என்ற பதற்றத்தில், தற்போது நீதித்துறையின் மீதும் தாக்குதல் நடத்த தொடங்கியிருக்கிறது பாஜக.
தே.காங். (சரத்) மக்களவை தலைவர் சுப்ரியா சுலே
உத்தவ் - ராஜ் தாக்கரே இணைவதாக வெளியாகியுள்ள செய்தி மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளது. மகாராஷ்டிராவின் அரசியல் நலனுக்காக 2 சகோதரர்களும் ஒன்று சேர்ந்தால், அதை நாம் முழு மனதுடன் வரவேற்க வேண்டும். தற்போதைய அரசியல் நிலைமைக்கும் நல்லது.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
அன்பான சிறுபான்மை சமூகங்களே பாஜக உங்கள் அனைவரையும் தாக்க வருவார்கள்.முஸ்லிம்கள் மட்டுமல்ல, சமணர்கள், பார்சிகள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் எல்லோரும் ஒன்றுபடுங்கள். அதுதான் வருங்காலத்திற்கு நல்லது.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்
பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே உச்சநீதிமன்றத்தையே அவமதித்துள்ளார். இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இது நீதித்துறையின் மீதான நேரடித் தாக்குதல் ஆகும். நிஷிகாந்த் துபே மீது சபாநாயகரும், நீதிமன்றமும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல்களால் பாஜக நீதித்துறையை அச்சுறுத்த முயற்சிக்கிறது.