ஜம்மு-காஷ்மீரில் இடைவிடா கனமழை பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு
ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்க ளாக தொடர்ச்சியாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இத னால் ஜம்மு-காஷ்மீர் மக்கள் இயல்பு நிலை இழந்து வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். குறிப்பாக கனமழை, மேக வெடிப்பு, நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை ஆகியவற்றால் ராம்பன் மாவட்டம் மிக மோசமான அளவில் பாதிக்கப்பட்டுள் ளது. ஞாயிறன்று அதிகாலை ராம்பன் மாவட்டத்தின் ஸ்ரீ பாக்னா கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கி சகோ தரர்கள் அகிப் அகமது, முகமது சாகிப் உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். இதன்மூலம் ஜம்மு- காஷ்மீரில் கனமழைக்கு உயிரிழந்தவர் களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள் ளது. ஜம்மு - ஸ்ரீநகர் துண்டிப்பு ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை யில் நஷ்ரி - பனிஹால் பகுதிகளுக்கு இடையே நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் ஏற்பட்டதில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் ஜம்மு - ஸ்ரீநகர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதி கள் தனித்தீவு பகுதிகளாக மாறியுள்ளன. பெங்களூரு
கர்நாடகாவில் கல.. கல... காதலுக்காக தேர்வுத்தாளில் ரூ.500 வைத்த மாணவர்கள் '
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள் ஒவ்வொருவரும் ரூ.500 நோட்டு வைத்து வித்தியாசமான கோரிக்கையை முன் வைத்துள்ளனர். அதில் ஒரு மாணவர்,”நான் தேர்ச்சி பெற்றால் மட்டுமே என் காதலைத் தொட ருவேன். என்னை பாஸ் செய்து விடுங் கள்” என கூறியுள்ளார். மற்றொரு மாண வரோ,”தயவுசெய்து என்னைத் தேர்ச்சி பெறச் செய்யுங்கள். என் காதல் உங்கள் கைகளில் உள்ளது” என இமோஜிகளு டன் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஒரு மாணவர்,”வாத்தியார் ஐயா, இந்த 500 ரூபாயுடன் தேநீர் அருந்துங்கள், தயவுசெய்து என்னைத் தேர்ச்சிப் பெற வையுங்கள்” என தேர்வு தாளில் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே சம்பவத்தை நிகழ்த்தியுள்ளனர். இதுதொடர்பாக ஆசிரியர்கள் மாநில கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ள நிலையில், விசா ரணை மேற்கொள்ள அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. ஆனால் தேர்வுத்தாளில் பணம் வைத்த மாணவர்கள் அனைவரும் ஒரே நண்பர்கள் கூட்டமாக இருக்கலாம் என வும், புரிதல் இன்றியும், பின்விளைவு இல்லாமல் செய்து இருக்கலாம் என்ப தால் பொறுமையாக விசாரிக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
உத்தவ் - ராஜ் தாக்கரே இணைகிறார்களா? பாஜக புலம்பல்
புதிய கல்விக் கொள்கை மூலம் மகா ராஷ்டிரா மாநிலத்தில் இந்தி மொழி யை கட்டயாமாக்கியுள்ளது ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசுகள். இந்த சம்ப வத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் மூலம் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே - நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே இணையும் சூழல் உருவாகியுள்ளது. உத்தவ் - ராஜ் தாக்கரே இணைந்தால் தங்களுக்கு அரசியல் ரீதியாக சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்த பாஜக புலம்பி வருகிறது. இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவரும், மகாராஷ்டிரா முதலமைச்ச ருமான தேவந்திர பட்னாவிஸ் செய்தியா ளர் சந்திப்பில் மழுப்பலாக பதிலளித்துள்ளார்.