சுட்டெரிக்கும் கோடை வெப்பம் தொடங்கியது!
சென்னை, ஏப்.20- தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கிவிட்டது. சுட்டெரிக்கும் வெயிலால் பகல் நேரத்தில் வெளியே தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரியை கடந்து விட்டது. இந்த வெயிலின் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதற்கு என்னதான் தீர்வு? என்பதை தொடர்ந்து பார்ப்போம். நாட்டின் மொத்த பரப்பளவில் 3-ல் ஒரு பங்கு என்ற அளவுக்கு பசுமை பரப்பு இருக்க வேண்டும். அதாவது,33.33 விழுக்காடு என்ற அளவில் மரங்கள் நிறைந்த வனப்பரப்பு இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் 23.7 சதவீதமாக உள்ளது. அப்படி என்றால், தமிழ்நாட்டில் இன்னும் வனப்பரப்பு தேவை 9.63 விழுக்காடாக உள்ளது. தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் வனப்பரப்பு 22,877 சதுர கிலோ மீட்டராக உள்ளது. இதில், காப்பு காடுகள் 19,388 சதுர கிலோ மீட்டர், பாதுகாக்கப்பட்ட காடுகள் 2,183 சதுர கிலோ மீட்டர், வகைப்படுத்தப்படாத காடுகள் 1,386 சதுர கிலோ மீட்டரும் அடங்கும். இப்படி வனப்பரப்பு குறைவதால், புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும். வெப்பத்தின் அளவு உயர்வுடன், மழையின் அளவு, காற்றின் தரம் குறையும். இது வருங்கால சந்ததிகளை வெகுவாக பாதிக்கும் நிலையை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் பசுமை பரப்பு அதிகரிக்கும் நோக்கத்தில்,தமிழக அரசின் சார்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு பசுமை தமிழகம் இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் மூலம் கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 10 கோடியே 86 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 36 மாவட்டங்களில்,310 நாற்றங்கால்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகரங்களில் இன்றைக்கு சாலை சிக்னல்களில் வெயிலின் தாக்கத்தை குறைக்க பச்சை நிற வலைப்பின்னல் ஆன பந்தல்கள் போடப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகளின் வசதிக்காக இது செய்யப்பட்டு இருந்தாலும்,சாலையோரம் இருபுறமும் மரங்கள் நிறைந்திருந்தால் இந்த செயற்கை பந்தல் அமைக்க வேண்டிய தேவையே இல்லை.
“பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது வரலாற்றுப் பிழை!”: திருமாவளவன்
சென்னை, ஏப்.20- “அதிமுக வரலாற்றுப் பிழையை செய்துவிட்டது. பாஜகவுடனான கூட்ட ணியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என விடுதலைச் சிறுத்தை கள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர் களை சந்தித்த திருமாவளவன், “பாஜக , ஆர்எஸ்எஸ் அமைப்புகள் ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் சக்தியாக உரு வெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் நிலை கொண்டிருக்கும் பெரியார், சமூக நீதி அரசியலை நீர்த்து போகச் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கி றார்கள்”என்றார். திராவிட கட்சிகளில் ஏதேனும் ஒன்றை பலவீனப்படுத்தி, பாஜக கால் ஊன்ற நினைக்கிறது. பின்னர் மற்றொரு திராவிட கட்சியையும் அழிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். திமுக, அதி முகவை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதை தாண்டி, சமூக நீதி அரசியலை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்பதே பாஜகவின் உள் நோக்கம். இதையெல்லாம் அறிந்தும் கூட அதிமுக வரலாற்றுப் பிழையை செய்து விட்டார் என்றும் அவர் கூறினார். 2021 சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வியை சந்தித்தபோதும், மீண்டும் பாஜகவோடு கூட்டணி வைத் திருப்பது அதிர்ச்சிய ளிக்கிறது. அதி முகவுக்கு ஏற்படும் பின்னடைவு என்பதை தாண்டி, பாஜகவை வாக்கு வங்கி ரீதியாக வலிமைப்படுத்து வதற்கு துணை போவது என்பது ஒரு வரலாற்றுப் பிழை. தமிழர், சமூக நீதி நலன்கள் கருதி, கூட்டணி குறித்து அதிமுக மீண்டும் சிந்தித்து மறுபரி சீலனை செய்வது வரலாற்றுத் தேவை யாக இருக்கிறது என்றும் திருமாவள வன் தெரிவித்தார்.