சிபிஎம் எர்ணாகுளம் மாவட்ட செயலாளராக எஸ்.சதீஷ் தேர்வு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் எர்ணாகுளம் மாவட்ட செயலாளராக எஸ்.சதீஷ் தேர்வு செய்யப் பட்டுள்ளார். ஞாயிற் றுக்கிழமை நடை பெற்ற மாவட்டக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக் கப்பட்டது. மாவட் டச் செயலாளராக இருந்த சி.என்.மோகனன் கட்சி யின் மாநிலச் செயற்குழுவிற்கு தேர்ந்தெ டுக்கப்பட்டதால் எஸ்.சதீஷ் புதிய செய லாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் களாக எஸ்.சதீஷ், எம்.பி.பத்ரோஸ், பி.ஆர்.முரளீதரன், ஜான் பெர்னாண்டஸ், கே.என்.உன்னிகிருஷ்ணன், சி.கே.பரீத், சி.பி.தேவதர்சனன், ஆர்.அனில்குமார், டி.சி.ஷிபு, புஷ்பதாசா ஆகியோர் உள்ள னர். கே.எஸ். அருண் குமார் மற்றும் ஷாஜி முகமது ஆகியோர் புதிதாக தேர்வு செய் யப்பட்டனர். மாவட்டக்குழு கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், மத்தியக் குழு உறுப்பினர் பி.ராஜீவ், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம். சுவராஜ், சி.என்.மோகனன், கே.கே.ஜெயச்சந்திரன், மாநிலக் குழு உறுப்பி னர்கள் சி.எம்.தினேஷ் மணி, கே.சந்தி ரன் பிள்ளை, எஸ்.சர்மா, எம்.அனில் குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர். கோதமங்கலத்தில் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த எஸ். சதீஷ், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நூலக பிரிவுச் செயலாளராக பொது வாழக்கையை தொடங்கினார். பின்னர், அவர் வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், மாநிலத் தலைவர் மற்றும் அகில இந்திய துணைத் தலைவராக பணி யாற்றினார். வாலிபர் சங்க மாத இதழான யுவதாராவின் மேலாளராகவும் பணி யாற்றினார். அவர் தற்போது சிபிஎம் கேரள மாநிலக் குழு உறுப்பினராகவும், இளைஞர் நல வாரியத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார். மும்பை