states

img

14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி – ஊராட்சித்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி – ஊராட்சித்துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை, டிச.18- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும்  ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதி யர்கள் சங்கத்தின் சார்பில், 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், வியா ழக்கிழமை மதுரை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை பகுதியில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும்  ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதி யர்கள் சங்க மதுரை மாவட்டத் தலைவர் மா.ஜெயசீலன் தலைமை தாங்கினார். மதுரை கோட்டத் தலைவர் பொ.கோமதி, திருமங்கலம் கோட்டத் தலைவர் சி. இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்த னர். மாவட்ட துணைத் தலைவர் அ.மா.கிருபாகரன் சக்திராஜ் வரவேற்புரை ஆற்றி னார். ஆர்ப்பாட்டத்தில், ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊராட்சித்துறை ஓய்வூதி யர்கள் மீது நிலுவையில் உள்ள ஒழுங்கு  நடவடிக்கைகள், புகார் மனுக்கள், விழிப்பு ணர்வு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைகள் ஆகியவற்றை அரசு நிர்ணயித்த காலவரையறைக்குள் முடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட் டது. ஓய்வு பெறும் நாளில் தற்காலிகப் பணிநீக்கம் நடைமுறையை முற்றிலும் கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. மேலும், சம வேலைக்கு சம ஊதியம்,  ஊராட்சி செயலாளர்களின் பணிக்கால ஓய்வூதிய கணக்கீட்டில் 50 சதவீதத்தை சேர்த்தல், அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்குதல், ஓய்வூதியப் பயன் கள் வழங்கலில் தாமதம் ஏற்படாமல் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தினர். அரசுத்துறை ஓய்வூதியர்களுக்கான “களஞ்சியம்” செயலியைப் போல,  ஊராட்சி ஒன்றியப் பணி ஓய்வூதியர்களுக்  கும் தனி செயலி உருவாக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இவை உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கை கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும்  மேற்பட்ட ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தினர். இதில் அனைத்து ஓய்வூதியர் சங்கம்,  மதுரை மாவட்டச் செயலாளர் அ.பாலமுரு கன் துவக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க மாநிலத்  தலைவர் தீ.ச.வி.மூர்த்தி சிறப்புரை யாற்றினார். தொடர்ந்து சங்க நிர்வாகிகளான ஜி.ஜெயராமன், பா.தினகரசாமி, சு.முத்து ராமலிங்கம், இ.ஆர்.இராசேந்திரன், மு. மகாலிங்கம் மற்றும் மகளிர் அணி துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.டாரதி நல்லம்மாள் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து கருத்துரையாற்றினர். தோழமை சங்க நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். அனைத்து ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் சு.கிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். மாவட்டப் பொருளாளர் ந.முருகேசன் நன்றி கூறினார். திண்டுக்கல் திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கே.விலங்கு தலைமை வகித்தார். சத்திய மூர்த்தி வரவேற்றார். ரவி துவக்கி வைத்துப்  பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியன் பேசினார். மாநில துணைத் தலைவர் வீரகடம்பகோபு, மாவட்டச் செயலாளர் மகுடபதி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் முபாரக் அலி, மாவட்டச் செய லாளர் சுகந்தி, சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் ஜெசி, சத்துணவு ஓய்வூதியர் சங்க தலைவர் ஜே.எஸ்.விஜயகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். அனைத்து ஓய்வூதிய சங்க மாநில தணிக்கையாளர் எஸ்.ராமமூர்த்தி சிறப்பு ரையாற்றினார். எஸ்.கணேசன் நன்றி கூறினார். தேனி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ரா.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் க.ரவிச்சந்திரன் வரவேற்று பேசி னார். மாவட்ட துணைத் தலைவர் கா.துரை ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் ஜி.என்.பிரகாஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தாமோ தரன், முன்னாள் மாவட்டத் தலைவர் இரா. கனகராஜன், முன்னாள் நிர்வாகி சி.மு.இப்ராகிம், அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சிவ மணி, சுருளியாண்டி உள்ளிட்டோர் பேசி னர். அரசு அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்க மாநில துணைத் தலைவர் பா.ராமமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார்.