ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பார்தி
ஹிஜாப் சர்ச்சையை மூடிமறைக்க “ஒரு இஸ்லாமியப் பெண் மருத்துவர் ஆக முடிந்தது நிதிஷ் குமாரால் தான்” என்கின்றனர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர். ஆனால் நிதிஷ் குமார் ஹிஜாப்பை இழுத்து அவமதித்த பெண் மருத்துவர் வேலைக்கு செல்லவே அஞ்சுகிறார். அவர் பீகாரை விட்டே சென்றுவிட்டார். இன்னும் இவர்கள் பெருமை பேசுவது வெட்கக்கேடு.
கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்
கர்நாடக சட்டமன்றத்தில் பாஜகவின் பலத்த போராட்டங்களுக்கு இடையே “வெறுப்புப் பேச்சு மற்றும் வெறுப்புக் குற்றங்கள் தடுப்பு மசோதா, 2025” நிறைவேற்றப்பட்டது. இனி இது சட்ட மேலவைக்கு செல்லும். இந்தச் சட்டம் தற்போதைய காலத்தின் கட்டாயமாகும்.
சிவசேனா (உத்தவ்) எம்.பி., பிரியங்கா சதுர்வேதி
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) பெயரை மாற்றியுள்ளார்கள். இது வெறும் பெயரை மாற்றுவது பற்றியது மட்டுமல்ல. திட்டத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்பையே மாற்ற பாஜகவினர் முயற்சி செய்கிறார்கள். இது மிகுந்த கவலைக்குரியது.
சமாஜ்வாதி எம்.பி., அவதேஷ் பிரசாத்
மக்களின் உயிரைப் பாதுகாப்பது அரசின் கடமை. காற்று மாசுபாடு உள்ளிட்ட முக்கியப் பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகளிடமிருந்து அரசு ஆலோசனைகளைப் பெற வேண்டும். ஆனால் பாஜக அரசாங்கம் எந்த ஆலோசனையும் பெறுவதில்லை. மக்களின் உயிரைப் பாதுகாப்பதும் இல்லை.
