states

img

ஸ்கேன் இந்தியா

நிராகரிப்பு

தெலுங்கானா மாநில உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை மக்கள் நிராகரித்துள்ளனர். 2024ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளில் 8இல் பாஜக வென்றது. 35 விழுக்காடு வாக்குகளைப் பெற்று கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதியை மூன்றாம் இடத்திற்கு தள்ளி விட்டு, பிரதான எதிர்க்கட்சியாக மாறிவிட்டோம் என்றனர். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கும், பிஆர்எஸ்-க்கும் இடையில்தான் போட்டி இருந்துள் ளது. பெரும் சரிவை பாஜக சந்தித்திருக்கிறது. பாஜக வை நம்பிக் கட்சி மாறியவர்கள் முழித்துக் கொண்டி ருக்கிறார்கள். பிஆர்எஸ்  அதிகமான வாக்குகளை வாங்கினால், காங்கிரசுக்குதான் ஆபத்து என்ற அரசியல் விமர்சகர்களின் கருத்து பொய்யாகி யுள்ளது. மறுபடியும் முதல்ல இருந்தா என்று பாஜக வின் இரண்டாம் மட்டத் தலைவர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பாரம்பரியம்

குஜராத்தில் துணை சபாநாயகர் மற்றும் பொதுக்கணக்குக் குழு தலைவர் தேர்த லில் போட்டியிடுவதென்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. பாரம்பரியமாக, இந்தப் பொ றுப்புகள் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்க ளிடம் தரப்படும். ஆனால், அதைத்தர பாஜக மறுத்து  வருகிறது. 2022 தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றதால் தர வேண்டியதில்லை என்பது அவர்கள் கருத்தாகும். போட்டியிட்டால் வெற்றி பெற முடி யாதே.. போட்டியை சவாலாக மாற்றும் அளவுக்குக் கூட எண்ணிக்கை இல்லையே.. என்று கேட்டதற்கு, ஜனநாயகப் பாரம்பரியத்தை பாஜக மதிக்க வில்லை என்பதை மக்களிடம் அம்பலப்படுத்தும் உத்தி என்கிறார்கள் காங்கிரஸ் நிர்வாகிகள். மக்கள வையில் துணை சபாநாயகர் பொறுப்பையே ஏழு ஆண்டுகள் நிரப்பாமல் ஓட்டிக் கொண்டிருக்கும் பாஜகவிடமா நீதியை எதிர்பார்க்கிறீர்கள் என்று சில நிர்வாகிகள் எதிர்க்கேள்வி கேட்கிறார்கள்.

நினைவூட்டல் 

பாஜகவின் தலைவராக நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டதில் இருந்து முன்னாள் தலைவர் ஜே.பி.நட்டா ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறார். பெரும் வெற்றியைத் திரையில் கண்டுள்ள துராந்தர் என்ற இந்திப்படத்தை அமர்ந்து பார்த்திருக்கிறார். அதோடு, பார்க்க வேண்டிய படங்கள் என்று ஒரு பட்டியலே வைத்திருக்கிறா ராம். வீட்டில் நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகிய தளங்களில் பார்க்கப் போகிறார். இதேவேளை யில், அவரது துறை அலுவலகத்தில் ஏராளமான கோப்புகள் இவருடைய கையொப்பத்திற்காகக் காத்திருக்கின்றன. அதிகாரிகளில் சிலரோ, இவர்தான் சுகாதாரத்துறைக்கு ஒன்றிய அமைச்சர் என்று யாராவது அவருக்கு நினை வூட்டக்கூடாதா என்று முணுமுணுக்கிறார்கள். கேட்டால், அவ்வப்போது சுகாதாரத்துறையில் என்ன நடக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறாராம். இதை அவருடைய உதவியாளர்கள் வெளியில் சொல்லிக் கொண்டிருக்கி றார்கள். 

கண்டிப்பு

பிணை கோரி யாராவது வந்தால் அந்த வழக்கை எனக்கு ஒதுக்காதீர்கள் என்று அல காபாத் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கஜ் பாட்டியா, தலைமை நீதிபதியிடம் கோரியிருக்கி றார். வரதட்சணைக் கொலை வழக்கொன்றில் பிணை கோரி வந்த குற்றவாளிக்கு, அவர் பிணை வழங்கியிருந்தார். அவரது அந்தத் தீர்ப்பை எதிர்த்து பெண்ணின் தரப்பு உச்சநீதிமன்றம் சென் றது. நீதிபதியின் தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றம் கடு மையான கண்டனத்தைத் தெரிவித்தது. குற்றவாளி யின் வழக்கறிஞர் சொன்னதைக் கேட்டு தீர்ப்பைத் தீர்மானித்தது தவறு. இதுமாதிரியான உத்தரவை இதுவரையில் நாங்கள் பார்த்ததில்லை என்று நீதிபதிகள் கூறினர். இது தனக்கு மனக்கவலை ஏற்படுத்திவிட்டதாக பங்கஜ் பாட்டியா கூறியுள் ளார். இவர் மீது ஏராளமான புகார்கள் உள்ளன. இந்த ஒரு வழக்கிலாவது உச்சநீதிமன்றம் கண்டித்தது நல்லது என்கிறார்கள் வழக்கறிஞர்கள்.