states

img

சாலை விதிக்காக போராடிய மூதாட்டிக்கு கேரள காவல்துறை  நேரில் பாராட்டு

சாலை விதிக்காக போராடிய மூதாட்டிக்கு கேரள காவல்துறை  நேரில் பாராட்டு

கேரள மாநிலம் கோழிக்கோட் ்டைச் சேர்ந்தவர் 73 வயது மூதாட்டியான பிரபாவதி யம்மாள். இவர் 3 நாட்களுக்கு முன் எரஞ்சிபாலம் பை பாஸ் சந்திப்பில் சென்று கொண்டி ருந்தார்.  அப்போது கடு மையான போக்கு வரத்து நெரிசலால், இளைஞர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை நடைபாதை வழியாக ஓட்டிச் செல்ல முயன்றார். இதைப் பார்த்த பிரபாவதி, வழிவிட மறுத்து அந்த இருசக்கர வாகனத்திற்கு குறுக்கே நின்று தடுத்தார். மேலும்,”இங்கு செல்லக் கூடாது, சாலையில் செல்லுங்கள் இது  நடைபாதை பகுதி” என வாக்குவா தத்தில் ஈடுபட்டு, தனது செல்போனை எடுத்து அவரைப் படம் பிடிக்கத் தொடங்கினார்.  இதனால் மிரண்டுபோன அந்த இளைஞர், தனது இருசக்கர வாக னத்தை பின்னோக்கித் தள்ளி மீண்டும் பிரதான சாலைக்கே கொண்டு சென்றார். இந்த வீடியோ சமூகவலைத் தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடைபாதையில் வாகனம் ஓட்டிய அந்த இளைஞரின் ஓட்டுநர் உரிமத்தை போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் உடனடியாக ரத்து செய்தனர். இத்தகைய சூழலில், கேரள காவல் துறை அதிகாரிகள் பிரபாவதியாம்மா வின் வீட்டுக்கே சென்று அவருக்குப் பொன்னாடை போர்த்தி கவுரவித்தனர்.