சிபிஎம் எம்.பி., ஜான் பிரிட்டாஸ்
பட்ஜெட் கூட்டத்தொடரை அவசரகதியாக முடிப்பதற்கான ஒன்றிய அரசின் முனைப்பு, இந்த பட்ஜெட் ஒரு தோல்வி என்பதை அவர்களே ஒப்புக்கொள்வதை நிரூபிக்கிறது. எப்ஸ்டீன் கோப்புகள் மற்றும் இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த விவாதங்களைத் தடுப்பதன் மூலம், பாஜகவினர் மக்களின் குரலை நசுக்குகிறார்கள்.
மூத்த பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்
நடைமுறையில் ஒரு நாட்டின் இறையாண்மை இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் மூலமாக அரிக்கப்படுகிறது. இது பிரம்மாண்டமான உடன்படிக்கைகள் மூலமாக நடப்பதில்லை. மாறாக, எந்தவொரு உண்மையான உள்நாட்டு விவாதமும் இன்றி நிகழ்கிறது.
ஆர்ஜேடி எம்.பி., சுதாகர் சிங்
நாடாளுமன்றம் நடைபெறுவதையே மோடி அரசு விரும்பவில்லை. காரணம் விவாதம் நடந்தால் இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் திட்டங்கள் அம்பலமாகிவிடும் என்பதை அறிந்தே நாடாளுமன்றம் முடக்கப்படுகிறது.
மூத்த பத்திரிகையாளர் கிருஷ்ண காந்த்
மோடி அரசு “ஷாந்தி மசோதாவை” சட்டமாக்கிய உடனேயே அதானி “அட்டாமிக் எனர்ஜி லிமிடெட்” என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன்மூலம் சட்டங்களையும் அரசியலமைப்பையும் மாற்றி அமைத்து, புதிய புதிய துறைகள் அதானியிடம் ஒப்படைக்கப்படுகின்றன என்பது அம்பலமாகியுள்ளது. மோடி ஆட்சியில் ‘தனியார்’ என்றாலே அது அதானி தான், ‘வளர்ச்சி’ என்றாலும் அது அதானி தான்.
