சண்டிகர் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவ ரும், லூதியானா மேற்கு தொகுதியின் எம்எல்ஏவுமான குர்பிரீத் பாஸி கோகி வெள்ளிக் கிழமை அன்று நள்ளிரவு தனது சொந்த கைத்துப்பாக்கி மூலம் குண்டு பாய்ந்து உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் கூறியுள்ள தாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இந்நிலையில், இதுதொடர் பாக செய்தியாளர்களிடம் பேசிய லூதியானா துணை காவல் ஆணை யர் ஜஸ்கரன் சிங்,”குர்பிரீத் கோகி துப்பாக்கியால் தன்னைத்தானே தலையில் சுட்டுக் கொண்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்த னர். லூதியானா டிஎம்சி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்ட குர்பிரீத் கோகி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். பிரேத பரி சோதனை அறிக்கைகள் வந்தவு டன் மரணத்திற்கான காரணம் தெளிவாகத் தெரியும். தொடர் விசாரணைகள் நடைபெற்று வரு கின்றன” என அவர் கூறினார். குர்பிரீத் கோகி இறப்பதற்கு முன்பு பஞ்சாப் சட்டமன்ற சபாநாய கர் குல்தார் சிங் மற்றும் ஆம் ஆத்மி எம்.பி., பல்பீர் சிங் ஆகியோ ரை சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு வெள்ளிக்கிழமை நள்ளி ரவு அளவில் தனது சொந்த கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற் கொலை செய்துள்ளார். பஞ்சாப் பில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர் துப்பாக்கியால் தன்னைத்தானே தலையில் சுட்டுக் கொண்டு உயிரி ழந்துள்ள சம்பவம் நாடு முழு வதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளன.