states

img

விவசாயி - தொழிலாளி விரோத நடவடிக்கைகள் ஒன்றிய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம்

விவசாயி - தொழிலாளி விரோத நடவடிக்கைகள்  ஒன்றிய அரசைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம்

புதுதில்லி பாஜக அரசு அமலாக்கி வருகிற விவசா யிகள், தொழிலாளர்கள் விரோத நட வடிக்கைகளை கண்டித்து சம்யுக்த கிசான் மோர்ச்சாவின் தலைமையின் கீழ் இந்தியா முழுவதும் ஜனவரி  16 அன்று ‘அகில இந்திய எதிர்ப்பு தினம்’ கடைப் பிடிக்கப்பட்டது.  ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம், உண வுப் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு உத்தரவாதம் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலும், கூட்டாட்சித் தத்து வத்தைச் சீர்குலைக்கும் வகையிலும் கொண்டு  வரப்பட்டுள்ள விதை மசோதா 2025, மின்சார மசோதா 2025, விபி-ஜிராம்ஜி சட்டம் 2025 மற்றும் நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளு க்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக் கப்பட்டது.  இந்தியா முழுவதும் நடைபெற்ற இப் போராட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொ ழிலாளர்கள், கிராமப்புறத் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்கள் பெருமளவு  கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பாஜக அரசின் மக்கள் விரோதச் சட்டங்களுக்கு எதிராக தங்களது எதிர்ப்புகளையும் பதிவு செய்துள்ளனர்.   பஞ்சாப், ஹரியானா, தில்லி, உத்தரகண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், தெலுங்கானா, குஜ ராத், ராஜஸ்தான், கேரளா, திரிபுரா, மேற்கு வங்காளம் என அனைத்து மாநிலங்களிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற போராட்டத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள், பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிரான கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.  குறிப்பாக இந்த நிகழ்வின் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் விவசாயிகள், தொழிலாளர் கள் விரோத கார்ப்பரேட் ஆதரவு கொள்கை களுக்கு எதிராகத் தொடர்ந்து ஒற்றுமையுடன் போராடுவோம் என  விவசாயிகளும், தொழிலா ளர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து புத்தாண்டு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். நாடு முழுவதும் பரவலாகவும் சரியான முறையிலும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட இந்தப் போராட்டமானது தங்களது உரிமைக ளையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதில் பொதுமக்களிடையே அதிகரித்து வரும் ஒற்றுமையையும் உறுதியையும் பிரதி பலிக்கிறது என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.  இந்த மக்கள் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறச் செய்யவும், கட்டாயக் கொள் முதல் உத்தரவாதத்துடன் கூடிய குறைந்த பட்ச ஆதரவு விலையைப் (MSP) பெறவும், வேலைவாய்ப்பு பாதுகாப்பு, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி உரிமைகளைப் பாதுகாக்க வும் முன்னெடுக்கப்படும் அகில இந்திய அளவிலான தொடர் போராட்ட இயக்கத்தின் முக்கியக் கட்டமாக இந்த எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. மோடி அரசாங்கத்தின் கொடூரமான மக்கள் விரோதக்  கொள்கைகளை முறியடிப்பதற்காக, வரும் நாட்களில் மத்திய தொழிற்சங்கங்கள், விவசாயத் தொழிலாளர் சங்கங்கள் மற்றும் நாட்டின் ஜனநாயக அமைப்புகளுடன் இணை ந்து போராட்டங்களை நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் தங்கள் அமைப்பு தொடர்ந்து தீவிரப்படுத்தும் என சம்யுக்த கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது.