பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே அதிகரிக்கும் இடைவெளி
போப்பாண்டவர் கவலை
உலகில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவது குறித்து போப் லியோ கவலை தெரிவித்தார். உலகின் முதல் கோடீஸ்வரராக வர விருக்கும் எலான் மஸ்க்கை மேற்கோள் காட்டி போப் இந்தக் கருத்தை தெரி வித்தார். தலைமை நிர்வாக அதிகாரிக ளின் ஊதிய தொகுப்புகளை விமர்சித்து அவர் தனது முதல் ஊடக நேர்காணலில் மேலும் கூறுகையில்,”உலகம் இவ்வ ளவு துருவமுனைப்புக்கு முக்கியக் கார ணம் தொழிலாளர்களின் வருமானத்திற் கும் பணக்காரர்கள் பெறும் பணத்திற்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளி ஆகும். 60 ஆண்டுகளுக்கு முன்பு, தலைமை நிர்வாக அதிகாரிகள் தொழிலாளர்களை விட நான்கு முதல் ஆறு மடங்கு அதிகமாக சம்பா தித்திருக்கலாம். இப்போது அது 600 மடங்கு அதிகமாக உள்ளது. எலான் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனராக மாறப் போகிறார் என்ற செய்தியைப் பார்த்தேன். அதன் அர்த்தம் என்ன? அதுதான் பெரிய விசயம் என்றால், நாம் பெரிய சிக்கலில் இருக்கிறோம்” என அவர் கூறினார்.