states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஐ (எம்-எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா

பீகாரில் மாநில அரசு ஒரு கணக்கெடுப்பை மேற்கொண்டது. அதில் மாநிலத்தில் தீவிர வறுமை நிலவுவது தெரியவந்துள்ளது. 94 லட்சம் குடும்பங்கள் மாதம் 6,000 ரூபாய்க்கும் குறைவான வருமானத்தில் எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அதனால் தற்போதைய அரசின் கீழ் பீகார் முன்னேற முடியாது என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

சிவசேனா (உத்தவ்) சஞ்சய் ராவத்

கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்திற்கு எதிர்க்கட்சிகள் கோரியபடி நிவாரணம் அறிவிக்கவில்லை. மாநில அரசின் நிவாரண அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இருப்பதாகவும் தெரியவில்லை. அதனால் பிரதமர் மோடி மும்பைக்கு வருகை தரும் போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவியை அறிவிக்க வேண்டும்.

பீகார் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார்

தேர்தல் ஆணையத்துடனான சந்திப்பின் போது பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம் மற்றும் சேர்க்கப்பட்டது குறித்து சரியான விவரங்களை கோரியுள்ளோம். கண்டிப்பாக இதுதொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்தகட்ட அறிவிப்பை வெளியிடுவோம்.

விபிஏ தலைவர் பிரகாஷ் அம்பேத்கர்

மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தின் ஒரு பகுதியினர் ஓபிசி பிரிவின் கீழ் இட ஒதுக்கீடு பெற குன்பி சான்றிதழ்களை கோரியுள்ளனர். அதே வேளையில் தங்கர்கள் இட ஒதுக்கீடு கோரி வருகின்ற னர். இதனால் மகாராஷ்டிராவில் இடஒதுக் கீடு கோரிக்கையால் பதற்றம் நீடிக்கிறது.