நாட்டில் உள்ள அனைத்து வேளாண் பல்கலைக் கழகங்களிலும், 20% இளங்கலை இடங்கள் இனி க்யூட் (CUET) -ஐசிஏஆர் (ICAR) நுழைவுத் தேர்வு மூலம் நிரப்பப்படும் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. 12ஆம் வகுப்பில் உயிரியல், வேதியியல், இயற்பியல், கணிதம் அல்லது வேளாண் மைப் பாடங்களைப் படித்த மாணவர்கள் இத்தேர்வு க்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி 3ஆம் சனிக்கிழமையான அக்., 4 அன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அளவுக்கு அதிகமான அளவில் குவிந்தனர். இதனால் தரிசனம் செய்ய 18 மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர். பீகாரில் தொடர்ந்து பாஜக - ஜேடியு கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் பீகார் மக்கள் மாநிலத்தைவிட்டு வெளியேறியதற்கு உண்மை யான காரணம், காங்கிரஸ் - ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சிகள்தான் என பிரதமர் மோடி வித்தியா சமாக குற்றம் சாட்டியுள்ளார். குஜராத்தில் பாஜகவின் மாநிலப் பிரிவின் புதிய தலைவராக குஜராத் அமைச்சர் ஜெகதீஷ் விஸ்வகர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
பஞ்சாப்பில் வன்முறை பதற்றம் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச
மாநிலத்தின் கான்பூர் அருகே மிலாடி நபியை (செப்., 4) முன்னிட்டு “ஐ லவ் முகமது” (i Love Mohammad) என்ற பேனர் வைக்கப் பட்டது. முஸ்லிம் அமைப்பினர் பேனர் வைத்தனர். ஆனால் உத்தரப்பிரதேச காவல்துறை எப்ஐஆர் பதிவு செய்தது. சில இடங்களில் கைது நடவடிக்கையும் அரங்கேற்றியது. இந்நிலையில், உத்தரப்பிரதேச காவல்துறையின் அடாவடியை கண்டி த்து பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் போராட் டம் நடைபெற்றது. இந்த போராட்டத் திற்குள் புகுந்து இந்துத்துவா குண்டர்கள் தாக்குதல் நடத்த ஜலந்தரில் மோதல் வெடித்தது. காவல்துறையினர் தடியடி நடத்தி மோதலை முடிவுக்கு கொண்டு வந்தாலும், ஜலந்தரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.