states

img

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்குவங்கத்தில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து வாக்குச்சாவடி அலுவலர்கள் போராட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்குவங்கத்தில் தேர்தல் ஆணையத்தை கண்டித்து வாக்குச்சாவடி அலுவலர்கள் போராட்டம்

கொல்கத்தா பீகாரைப் போல தமிழ்நாடு, கேர ளம், மேற்குவங்கம் உட்பட 12  மாநிலங்களில் (யூனியன் பிர தேசங்கள் சேர்த்து) வாக்காளர் பட்டி யல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை  (எஸ்ஐஆர்) இந்திய தேர்தல் ஆணை யம் அவசர கதியில் தீவிரப்படுத்தி வரு கிறது. எஸ்ஐஆர் பணியின் போது வீடு  வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெ டுப்பு படிவங்களை வழங்கி, அவற்றை பூர்த்தி செய்த பிறகு, டிஜிட்டல் முறை யில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய  வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒரு மாதமே காலக்கெடு ஆகும். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் பணியில் தீவிர அழுத்தம் இருப்பதாக கூறி வாக்குச்சாவடி நிலை  அலுவலர்கள் (பிஎல்ஓ) மாநிலம் தழு விய போராட்டம் நடத்தியுள்ளனர்.

சிலி குரி, ஹவுரா, பராக்பூர், பராசத் உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பிஎல்ஓ க்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.  இதுதொடர்பாக போரட்டத்தில்  பங்கேற்ற பிஎல்ஒ-க்கள் கூறுகை யில், “குறுகிய காலக்கெடுவுக்குள் ஒரு  அலுவலர் சுமார் 200 படிவங்களின் தரவு களைப் பதிவேற்ற வேண்டியுள்ளது. இது தங்களுக்கு நியாயமற்ற பணிச்  சுமையை ஏற்படுத்துகிறது. எஸ்ஐஆர்  பணியில் ஆசிரியர்கள் அதிகமாக இருப்  பதால் தங்களது அன்றாடப் பள்ளிப் பணிகளுடன், தேர்தல் ஆணையத்தின் இந்த கூடுதல் சுமையைச் சமாளிக்க முடியவில்லை. குறிப்பாக முறையான  பயிற்சி அளிக்கப்படவில்லை. ஆனால்  திடீரென டிஜிட்டல் முறையில் பதிவேற் றம் செய்யச் சொல்கின்றனர். பணியில் போதுமான தரவு உள்ளீட்டாளர்கள் நியமிக்கப்படவில்லை.

வயது முதிர்ந்த பல அலுவலர்கள் டிஜிட்டல்  தொழில்நுட்பம் மற்றும் செல்போன் செயலிகளைப் பயன்படுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். நள்ளிரவில் செல்போனில் அழைத்து  திடீர் உத்தரவுகள் பிறப்பிப்பதன் மூலம் தங்களது தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கிறது. எனவே, பணிச்சுமை யைக் குறைக்க உள்ளூர் அளவில் தரவு  உள்ளீட்டாளர்களை உடனடியாக நிய மிக்க வேண்டும். படிவங்களைப் பதி வேற்றம் செய்வதற்கான காலக்கெடு வை நீட்டிக்க வேண்டும்” என கோரி க்கை விடுத்துள்ளனர். போராட்டத்தை தொடர்ந்து அலுவ லர்களின் பணிச்சுமை குறித்து தேர்தல் ஆணையத்திற்குத் தெரியப்படுத்தி, கூடுதல் பணியாளர்களை நியமிக்க அனுமதி கோரியுள்ளதாக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவல கம் தெரிவித்துள்ளது. ஆனால் படி வங்களைச் சமர்ப்பிப்பதற்கான டிசம்பர் 4ஆம் தேதி காலக்கெடுவை நீட்டிக்க தேர்தல் ஆணையம் இதுவரை முன்வரவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் மேற்கு வங்க மாநிலத்தில் பிஎல்ஓ-க்களின் போராட்டம் தீவிரமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது என செய்திகள் வெளி யாகியுள்ளது.