வேலைப்பளுவால் வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை கேரளம் முழுவதும் எஸ்ஐஆர் பணியை புறக்கணித்து போராட்டம்
கண்ணூர் பீகாரைப் போல தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் (யூனி யன் பிரதேசங்கள் சேர்த்து) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) இந்திய தேர்தல் ஆணையம் அவசர கதியில் தீவிரப்படுத்தி வருகிறது. எஸ்ஐ ஆர் பணியின் போது வீடு வீடாகச் சென்று வாக்கா ளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, அவற்றை பூர்த்தி செய்த பிறகு, டிஜிட்டல் முறை யில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண் டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள் ளது. இதற்கு ஒரு மாதமே காலக்கெடு ஆகும். இந்நிலையில், எஸ்ஐஆர் பணி அழுத்தம் காரணமாக கேரளாவில் வாக்குச் சாவடி நிலை அலுவலர் (பிஎல்ஓ) தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள் ளது. கண்ணூர் மாவட்டம் காங்கோல் ஆலப் படம்பா பஞ்சாயத்தில் உள்ள ஏற்றுக்குடுக்கா 18ஆவது வாக்குச்சாவடியின் பிஎல்ஓ அனீஷ் ஜார்ஜ் (41) ஞாயிற்றுக்கிழமை காலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடல மாக மீட்கப்பட்டார். குந்நரு ஏயுபி பள்ளியில் அலுவலக உதவி யாளராக இருந்த அனீஷ், படிவங்களை விநியோகித்தல், நிரப்புதல் மற்றும் சேகரித்தல் போன்ற பணி அழுத்தத்தை தாங்க முடிய வில்லை என்று கூறியதாக அனீஷின் குடும்பத்தி னர் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும்,”பணி அழுத்தம் காரணமாக அவர் மூன்று முறை வேலையிலிருந்து விடுவிக்கக் கோரி விண் ணப்பித்திருந்தார். சனிக்கிழமை இரவு 1:30 மணி வரை படிவங்களை நிரப்பும் பணியில் அனீஷ் ஈடுபட்டிருந்தார்” என அனீஷின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் எஸ்ஐஆர் படி வங்களை விநியோகிப்பதில் அனீஷ் தன்னு டன் செல்லவில்லை என்று உள்ளூர் காங்கிரஸ் ஊழியர் வைசாக் ஆட்சியரிடம் புகார் அளித்தி ருந்தார். இது அனீஷை மிகுந்த மன அழுத்தத்தி ற்கு உள்ளாக்கியது என செய்திகள் வெளி யாகியுள்ளன. மாநிலம் தழுவிய போராட்டம் பணி அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட கண்ணூர் பிஎல்ஓ அனீஷ் ஜார்ஜின் மரணத்தைக் கண்டித்து, கேரளம் முழு வதும் எஸ்ஐஆர் பணியை புறக்கணித்து தேர்தல் அலுவலர்கள் போராட்டம் நடத்தினர். போ ராட்டத்தின் போது உள்ளாட்சித் தேர்தல் வரை எஸ்ஐஆர் பணிகளை ஒத்திவைக்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர். திருவனந்தபுரத்தில் உள்ள கேரள சட்டமன்றத் திற்கு அருகே மாநில முதன்மை தேர்தல் அதி காரி (கேரளா) ரத்தன் கேல்கரின் அலுவல கம் முன்பு பேரணியுடன் போராட்டம் நடை பெற்றது. அதே போல ஒவ்வொரு மாவட்டங்களி லும் அரசு அலுவலகங்களுக்கு வெளியே போராட்டங்கள் நடைபெற்றன. இதனால் திங்களன்று கேரளாவில் எஸ்ஐஆர்பணிகள் முடங்கின. ராஜஸ்தானிலும்.. பாஜக ஆளும் ராஜஸ்தானில் ஒரு வாக்குச் சாவடி நிலை அதிகாரி ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்டார். எஸ்ஐஆர் பணி யின் ஒரு பகுதியாக கடுமையான பணி அழுத் தத்தில் இருப்பதாகக் கூறி தற்கொலைக் குறிப்பை எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஞாயிறன்று ஜெய்ப் பூரில் உள்ள பிந்தயாகாவில் நடந்தது. இறந்த வர் முகேஷ் ஜாங்கிட் (45) என்ற பள்ளி ஆசிரியர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. எஸ்ஐஆர் தொடர்பாக கடுமையான அழுத்தம் இருந்ததாகவும், மேற்பார்வையாளர் அவரை இடைநீக்கம் செய்வதாக மிரட்டியதாகவும் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
எஸ்ஐஆரில் தொடரும் அநீதிகள் : சிபிஎம்
பிஎல்ஓ அனீஷ் ஜார்ஜ் தற்கொலை தொடர்பாக சிபிஎம் கண்ணூர் மாவட்டச் செயலாளர் கே.கே.ராகேஷ் கூறுகையில்,”தற்கொலை செய்து கொண்ட பிஎல்ஓ அனீஷ் ஜார்ஜின் தந்தை மற்றும் குடும்பத்தினர் சொன்னதைக்கூட கேரள எதிர்கட்சி தலைவர் சதீசன் நம்பத் தயாராக இல்லை. தனது மகன் விடியற் காலை வரை உழைத்து கஷ்டப்பட்டார் என்பது அனீஷ் ஜார்ஜ் தந்தை ஊடகங்க ளுக்குத் தெரிவித்தது உண்மை தான். ஆனால் இந்த விவகாரத்தில் எப்படியா வது சிபிஎம் மீது குற்றம் சாட்டப்படலாம் என்று சதீசன் (எதிர்க்கட்சித் தலைவர்) நினைக்கிறார். எஸ்ஐஆரின் நோக்கத்தை ராகுல் காந்தியே கூறியிருந்தாலும், அது எதிர்க்கட்சித் தலை வருக்கு முக்கியமில்லை. சதீசன் ஆர்எஸ்எஸ்ஸின் கருத்தைப் பின்பற்றுகிறார். இந்த நடவடிக்கை பாஜகவுக்கு உதவுவதற்காகும். குறுகிய காலத்தில் அதிக வேலை வழங்கப்படுவதால் ஊழியர்கள் மிகுந்த அழுத்தத்தில் உள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் தற்கொலைகள் நடக்கின்றன. தேர்தல் களுக்குப் பொறுப்பான மாவட்ட ஆட்சித்தலைவர் வேறுபட்ட அறிக்கையை வழங்க முடியாது, ஆட்சி யருக்கு இயல்பாகவே பல வரம்புகள் உள்ளன” என அவர் கூறினார்.
