மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தான் மாவட்டத்தில் உள்ள ஷேகான் தாலுக்காவிற்கு உட்பட்ட பாண்ட் கான், கல்வாத், கதோரா உள்ளிட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக தலைமுடி கொட்டி, முடி உதிரும் நிலை ஏற் பட்டுள்ளது. ஆண்கள் மட்டுமின்றி பெண் கள், சிறுவர்களுக்கும் இந்த முடி உதிரும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உள்ளூர் சுகாதாரத் துறை இந்த திடீர் முடி உதிரும் காரணத்தை கண்டறிய ஆய்வு மேற் கொண்டனர். இந்த ஆய்வில் நச்சுத்தன்மை கலந்த தண்ணீர் காரணமாகத் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பொதுவாக மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் 10 மில்லி கிராம் அளவில் மட்டுமே நைட்ரேட் இருக்க வேண்டும். ஆனால் இந்த 6 கிராமங்களில் பயன் படுத்தப்படும் தண்ணீர் மாதிரிகளில் 55% அளவில் நைட்ரேட் எனும் ரசாயனப் பொருள் இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் தண்ணீரில் ஈயம் மற்றும் ஆர்சனிக் போன்ற நச்சு ரசாயனங்களும் உள்ளன. ஆய்வு முடிவுகள் புனேவில் உள்ள ஆய்வுக் கூடங்களுக்கு அனுப் பப்பட்டுள்ளதாகவும் அதன் முடிவுகள் 8 முதல் 10 நாட்களில் கிடைத்துவிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடித்தால் என்னவாகும்? புல்தான் மாவட்டத்தின் 6 கிராமங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரில் 55% அளவில் நைட்ரேட் இருப்பதன் காரண மாகவே அப்பகுதி மக்களுக்கு முடி உதிரும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குளிப்பதால் முடி உதிரும் சூழ்நிலை யில், அதே தண்ணீரை குடித்தால் என்ன அபாயம் ஏற்படும் என்பதை பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை விளக்கம் அளிக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.