டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணையாத மக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து விலக்கப்படும் ஆபத்து மாநிலங்களவையில் சிபிஎம் எம்.பி., சிவதாசன் எச்சரிக்கை
புதுதில்லி இந்தியாவில் நிலவும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் இணையாத விளிம்புநிலை மக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்தே விலக்கப்படும் ஆபத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வி.சிவதாசன் கூறினார். டிஜிட்டல் உலகிற்கு வெளியே 38% நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. திங்களன்று மாநிலங்கள வையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத் தில் முனைவர் வி.சிவதாசன் பேசுகை யில்,“இந்தியாவில் நிலவும் டிஜிட்டல் பிளவு, விளிம்புநிலை மக்களை வாக்காளர் பட்டிய லில் இருந்து மேலும் விலக்கி, ஜனநாயக உரி மைகளுக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. 38% இந்திய மக்கள் இன்னமும் டிஜிட்டல் தொழில்நுட்ப உலகிற்கு வெளியே இருக்கின்றனர். 43% பள்ளிகளுக்கு இன்னமும் கணினி வசதிகள் ஏற்படுத்தப்பட வில்லை. 46% பள்ளிகளுக்கு எவ்விதமான இணைய இணைப்பு வசதிகளும் இதுவரை ஏற் படுத்தப்படவில்லை. இவ்வாறான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் இடைநிற்றலை எதிர்கொண்டு வருகின்றனர். டிஜிட்டல் பிளவு என்பது வெறும் தொழில் நுட்பப் பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு தீவிரமான சமூக மற்றும் நிர்வாகச் சவால் ஆகும். டிஜிட்டல் வருகைப் பதிவு முறைகள் கோடிக்கணக்கான கிராமப்புறத் தொழிலா ளர்களைப் பாதகமாகப் பாதித்துள்ளது. டிஜிட்டல் ஆவணங்கள் இல்லாததால் பலருக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டப் பலன்கள் மறுக்கப்பட்டுள்ளன. குடியுரிமை மற்றும் வாக்குரிமைக்கு ஆவ ணங்கள் இப்போது கட்டாயமாக்கப்படுகின்றன. சிறப்பு தீவிர திருத்தத்தில் கோரப்படும் ஆவணங்கள் இல்லாததால் லட்சக்கணக்கான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். இது ஜனநாயகத்திற்கு ஒரு நேரடி சவால் ஆகும். ஒன்றிய அரசாங்கம் சிறப்பு தீவிர திருத்தத் திட்டத்தை உடனடியாக மறு ஆய்வு செய்திட வேண்டும். இத்திட்டத்தின் விளைவாக எந்த வொரு குடிமகனுக்கும் உரிமைகள் மறுக்கப்ப டக் கூடாது, அவர்கள் பொது சேவைகளில் இருந்து விலக்கப்படக் கூடாது. இதனை ஒன்றிய அரசாங்கம் உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு முனைவர் வி. சிவதாசன் பேசி னார். (ந.நி.)
