states

img

வட மாநிலங்களில் விறகு அடுப்பு மூலம் வீதிகளில் சமைக்கும் மக்கள்

வட மாநிலங்களில் விறகு அடுப்பு மூலம் வீதிகளில் சமைக்கும் மக்கள்

தீவிரமடையும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு

புதுதில்லி மேற்கு ஆசியாவில் அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் போர் காரண மாக ஹோர்மூஸ் நீர்வழிப்பாதையை ஈரான் மூடி யுள்ளது. ஹோர்மூஸ் உலகின் மிக முக்கிய சரக்குப் போக்குவரத்து பாதை என்ற நிலை யில், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சமை யல் எரிவாயு உள்ளிட்ட இதர பொருட்களின் இறக்குமதியை சார்ந்து இருக்கும் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகள் அத்தியாவசிய தேவைக்கான பிரச்சனைகளை மிக மோச மான அளவில் எதிர்கொண்டு வருகின்றன. இதில் இந்தியாவின் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பாஜக ஆட்சி யில் இல்லாத மாநிலங்கள் தங்களது கூர்மை யான பொருளாதாரக் கட்டமைப்பால் பெரிய ளவு பிரச்சனையின்றி ஓரளவு சமாளித்து வருகின்றன. ஆனால் பாஜக ஆளும் குஜராத், ராஜஸ்தான், பீகார், மத்தியப் பிரதேசம், தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு பிரச்ச னையில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றன. குறிப்பாக வட மாநில மக்கள் சமையல் எரிவாயு  தட்டுப்பாட்டால் விறகு அடுப்பு மூலம் வீதி களில் சமைத்து வருகின்றனர். உணவின்றி தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களில் வாழும் மக்களுக்கு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மட்டுமே  பிரச்சனை ஆகும். அவர்கள் விறகு மூலம் சமாளித்து வருகிறார்கள். ஆனால் வெளிமாநி லங்களுக்குச் சென்று, அங்கு தங்கி பணி புரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் உண விற்கே அல்லாடி வருகின்றனர். சமையல் எரி வாயு தட்டுப்பாடு காரணமாக வேலை பார்க்கும் இடங்களில் முன்பு வழங்கியதைப் போல, தற்போது உணவு வழங்க மறுக்கப்படுகிறது. உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாலும், உண விற்கு என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநி லங்களுக்கு திரும்பிக் கொண்டு இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.