ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றம்
ஆன்லைன் சூதாட்ட செயலிகளில் பணம் வைத்து விளையாடும் நபர்கள் குறுகிய காலத்திலேயே அந்த விளை யாட்டிற்கு அடிமையாகி, பணத்தை இழப்ப தோடு தற்கொலையும் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இதுபோன்ற பணம் சம்பாதிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளில் பலரும் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். பல குடும்பங்கள் கடனில் தள்ளப்படுகின்றன. இந்த ஆன்லைன் கேமிங் மசோதாவை முடி வுக்கு கொண்டு வரும் மசோதாவுக்கு செவ்வாய்க் கிழமை அன்று பிரதமர் மோடி தலைமையி லான ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவின் கீழ் பணம் வைத்து விளையாடும் அனைத்து கேமிங் பரிவர்த்தனை களையும் தடை செய்ய முடியும். அதாவது ஆன் லைன் விளையாட்டுகளுக்குப் பணம் அனுப்பும் பரிவர்த்தனைகளை வங்கிகளும், நிதி நிறுவனங்களும் செய்ய அனுமதிக்கப் படாது. இதன் மூலம் ஆன்லைன் சூதாட்டம் உள்ளிட்ட கேம்களுக்கு பண பரிவர்த்தனை செய்ய முடியாது. தொடர்ந்து “ஆன்லைன் கேமிங் ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டுச் சட்டம் 2025” என்ற பெயரில் மசோதா புதன்கிழமை அன்று மக்கள வையில் நிறைவேறியது. இதற்கிடையே இந்த மசோதா வியாழக்கிழமை அன்று மாநி லங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. கிளர்ச்சிக்கு நடுவே மசோதா பிரதமர், முதலமைச்சர் கைதானால் பதவி நீக்கம் என்று மோடி அரசு கொண்டு வந்த மற்றொரு மசோதாவுக்கு எதிராக மாநிலங்கள வையில் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையே ஆன்லைன் சூதாட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலம் நிறை வேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பிறகு இம் மசோதா சட்டமாகும். இந்த மசோதா சட்டமா னால் ஆன்லைன் சூதாட்டம் நடத்துபவர்க ளுக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இது ஆன் லைன் கேமிங் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பி டத்தக்கது.