மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை
புதுதில்லி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2027ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகளுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை ஒன்றிய உள் துறை அமைச்சகம் வெளியிட்டுள் ளது. அதன்படி முதல் கட்டமாக வீடு கள் பட்டியலிடுதல், வீட்டு வசதி கணக்கெடுப்புப் பணிகள் இந்த ஆண்டு, ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முதற்கட்ட கணக்கெடுப்பில் 2021ஆம் ஆண்டு கேட்கத் திட்டமிடப்பட்டி ருந்த வீட்டின் எண், வீட்டின் நிலை மற்றும் வீட்டில் வசிப்பவர்களின் எண்ணிக்கை விபரங்கள், பெயர், பாலினம் மற்றும் அவர் பட்டியல் இனத்தவரா அல்லது பழங்குடி யினரா என்ற விபரங்கள், வீட்டின் உரிமையாளர் யார், தம்பதிகள் எண்ணிக்கை மற்றும் வீட்டில் உள்ள அறைகளின் எண்ணிக்கை போன்ற தகவல்கள் என 33 கேள்விகள் கேட்கப்படவுள்ளன. அதே போல, இரண்டாம் கட்டமாக 2027ஆம் ஆண்டு, பிப்ரவரி 9ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெறும் மக்கள் தொகை கணக் கெடுப்பில், 1931ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாகச் சாதி வாரி விபரங்களும் சேகரிக்கப்பட வுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.