மோடியின் காலில் விழ முயன்ற நிதிஷ்
வாக்குத் திருட்டு, ரூ.10,000 லஞ்சம் உள்ளிட்ட சர்ச்சை களுக்கு இடையே பீகார் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் நிதிஷ் குமார் வியாழனன்று பதவியேற்றார். இந்நிகழ்வில் பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர் கள் பங்கேற்றனர். புதிய அமைச்சரவை யும் பதவியேற்றன. பதவியேற்பு விழாவிற்கு பின்பு பாட்னா விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வழியனுப்ப நிதிஷ் குமார் சென் றார். அப்போது மோடியின் காலில் நிதிஷ் குமார் விழ முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் மோடி இதனை தடுத்துவிட்டார். மாநில முதலமைச்சர் பிரதமர் காலில் விழ முயன்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
