திஸ்பூர் மேற்குவங்கம், அசாமில் நெருங்கும் தேர்தல் மேலும் 5 ரயில்களை துவக்கி வைத்த மோடி
மேற்குவங்கம் மற்றும் அசாம் மாநி லங்களில் இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. தோல்வி பயத்தில் உள்ள பாஜக மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் வகுப்புவாத வன் முறைகளுடன் தொடர்ச்சியாக ஒன்றிய அரசு திட்டங்களை பிரச்சார பொருளாக வாரி இறைத்து வருகிறது. குறிப்பாக, பிரதமர் மோடி மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களிலேயே முகா மிட்டுள்ளார். சனியன்று (ஜன., 17) மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அவர் துவக்கி வைத்தார். தொடர்ந்து அடுத்த 24 மணிநேர இடைவெளியில் 5 அம்ரித் பாரத் ரயில்களை மோடி ஞாயி றன்று துவக்கி வைத்தார். அசாமில் நடை பெற்ற தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று ரயில்களை காணொலி வழி யாக கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
லக்னோ இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் தில்லியில்
இருந்து மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு திங்க ளன்று காலை 8:46 மணியளவில் இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது. புறப்பட்ட விமானத்தின் கழிவறை யில் இருந்த பேப்பரில் (Tissue paper) விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டி ருப்பதாக எழுதப்பட்டிருந்ததை விமா னப் பணியாளர்கள் கண்டறிந்தனர். உட னடியாக விமானிக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. விமானிகள் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ விமான நிலையத்தில் அவசர அவசரமாக விமானத்தை தரை யிறக்கினர். விமானத்தில் இருந்த 230 பய ணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப் பட்டு, வெடிகுண்டு நிபுணர்கள் விமா னத்தில் தீவிர சோதனைகளை மேற் கொண்டனர். சோதனையில் வெடி குண்டு எதுவும் கண்டறியப்படவில்லை என்பதால் இது வெறும் புரளி என தெரிய வந்தது.