அந்தமான் பழங்குடி மக்களை விரட்ட மோடி அரசு தீவிரம்
130 சதுர கி.மீ. பழமையான காடுகள் அழிந்து போகும் அபாயம்
நிகோபார் தீவுகள் வங்கக்கடல் பகுதியில் உள்ளது அந்த மான் நிகோபார் தீவுகள்.இது நாட்டின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். மாலத்தீவு, லட்சத்தீவு போன்ற அழகிய கடற் கரைகளைக் கொண்ட இந்த அந்தமான் தீவுகளின் முக்கிய வருவாய் சுற்றுலா தான். இந்நிலையில், அந்தமான் தீவுகளில் “கிரேட் நிகோபார்” என்ற பெயரில் மெகா உள்கட்டமை ப்பு திட்டம் ஒன்றை மோடி அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தில் 160 சதுர கி.மீ.,க்கும் அதிகமான பரப்பளவில் ஒரு டிரான்ஸ்ஷிப் மென்ட் (சரக்கு கப்பல்கள் அல்லது கொள் கலன்கள் ஒரு கப்பலில் இருந்து இன்னொரு கப்பலுக்கு மாற்றும் செயல்முறை) துறை முகம், ஒரு சர்வதேச விமான நிலையம், ஒரு டவுன்ஷிப் மற்றும் ஒரு மின் உற்பத்தி நிலை யம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. 160 சதுர கி.மீ., பகுதியில் 130 சதுர கி.மீ. பழமை யான காடுகளைக் கொண்டது. திட்டத்தை செயல் படுத்தினால் நிகோபரீஸ், ஷோம்பென்ஸ் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகள் அடி யோடு அழிக்கப்படும். பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகள் மட்டுமின்றி புலிகள் வாழ்வி டங்களும் அழிவுக்குள்ளாகும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், விலங்குகள் மற்றும் வன ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த எச்சரிக்கையை மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. திட்டம் குறைபாடுகளுடையது இதுதொடர்பாக முன்னாள் ஒன்றிய சுற்றுச் சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் (காங் கிரஸ் பொதுச் செயலாளர்) கூறுகையில், “நிகோபார் மெகா உள்கட்டமைப்புத் திட்டம் பழங்குடியின சமூகங்களை இடம்பெயர வைத்து, அவர்களின் உயிர்வாழ்வையும் நலனையும் சீர்குலைக்க அச்சுறுத்துகிறது. இந்தத் திட்டம் தற்போதைய அனைத்து விதி முறைகள், கொள்கைகள் மற்றும் சட்டங்களுக் கும் எதிரானது. குறிப்பாக திட்டத்தின் சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அவசரப்படுத்தப் பட்டது, முழுமையற்றது மற்றும் குறைபாடு களுடையது ஆகும். ஷோம்பென்ஸ் மற்றும் நிகோ பரீஸ் பழங்குடியினர்கள் குறித்து நிபுணர்கள் தயாரித்த வீடியோ அறிக்கைகள் மெகா நிகோ பார் உள்கட்டமைப்புத் திட்டத்தில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.