states

img

“வெளிநாட்டுத் தலைவர்களை, எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பதை மோடி அரசு விரும்புவதில்லை”

“வெளிநாட்டுத் தலைவர்களை, எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திப்பதை மோடி அரசு விரும்புவதில்லை”

இந்தியா - ரஷ்யாவின் 23ஆவது உச்சி மாநாடு தில்லியில் நடை பெறுகிறது. இதில் பங்கேற்க 2 நாள் பயணமாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் வியாழனன்று தில்லி வந்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்திக்க மக்கள வை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மோடி அரசு அனுமதி மறுத்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி நாடாளு மன்ற வளாகத்தில் செய்தியாளர்க ளிடம்,“வெளிநாட்டுத் தலைவர்களை எதிர்க்கட்சி தலைவர்கள் சந்தித்துப் பேசுவது மரபாக இருந்து வந்தது. முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆட்சிக் காலங்களிலும் இது கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால், தற்போது வெளிநாட்டுத் தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தரும்போதும் அல்லது நான் வெளிநாடு செல்லும் போதும், எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வேண்டாம் என்று ஒன்றிய அரசு அறிவுறுத்துகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளி நாட்டுத் தலைவர்களைச் சந்திப்பதை அரசு விரும்புவதில்லை. இந்தியா வருகை தரும் வெளிநாட்டுத் தலை வர்களை, பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் எதிர்க்கட்சிகளி டமிருந்து விலக்கியே வைத்துள்ளது. போதிய பாதுகாப்பின்மையால் இது போன்று செய்கிறார்கள்.  எதிர்க்கட்சி தலைவர் மாறுபட்ட கண்ணோட்டத்தை கொண்டிருப்பதை இந்த அரசு விரும்பவில்லை” என அவர் குற்றம்சாட்டினார்.