ஒன்றிய பட்ஜெட்டில் விவசாயி களுக்காக எந்த அறிவிப்புகள் வெளியாகவில்லை என பாஜகவின் முன்னாள் கூட்டணிக் கட்சியான சிரோ மணி அகாலிதளம் கண்டனம் தெரிவித் துள்ளது. இதுதொடர்பாக நாடாளு மன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியா ளர்கள் சந்திப்பில் சிரோமணி அகாலிதள எம்.பி., ஹர்சிம்ரத் கவுர் கூறுகையில், “சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களின் பெயர்கள் மட்டும் ஒன்றிய பட்ஜெட்டில் உள்ளன. குறிப்பாக பட்ஜெட் டில் பீகார், பீகார், பீகார் என்ற குரல் மட்டுமே அதிகளவில் ஒலித்தன. பஞ்சாப் பற்றி பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப் படவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத் திற்காக விவசாயிகள் கடந்த 4 ஆண்டு களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக அவர்கள் என்ன அறிவித்தார்கள்? இது விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளின் குரல் கேட்கப்பட வில்லை என்பது மிகவும் வருத்தமளிக் கிறது” என அவர் கூறினார்.