states

img

தோல்விகளைக் கொண்டாடும் மோடி அரசு

தோல்விகளைக் கொண்டாடும் மோடி அரசு' பஹல்காம் விவாதத்தில் சிபிஎம் எம்.பி., டாக்டர்.ஜான் பிரிட்டாஸ் சாடல்

மோடி அரசின் பாது காப்பு, வெளியுறவு மற்றும் சிறுபான் மையினர் கொள்கைகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் டாக்டர் ஜான் பிரிட்டாஸ் நாடாளுமன்றத்தில் சிறப்புமிக்க உரையொன்றை ஆற்றினார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஜூலை 30ஆம் தேதி பஹல்காம் தாக்குதல் தொடர் பான விவாதத்தில் பங்கேற்று அவர் ஆற்றிய உரை அரசியல் வட்டா ரங்களில் பரவலான அலைகளை எழுப்பியுள்ளது. ‘புதிய பாரதம்’ என்பது தோல்விகளைக் கொண்டாடுவதா? பாஜக கூறுகிற ‘புதிய இயல்பு நிலை’, ‘புதிய பாரதம்’ என்பது உண்மையில் தோல்விகளைக் கொண்டாடுவது என்றே ஆகியி ருக்கிறது” என்று தனது உரை யைத் தொடங்கிய ஜான் பிரிட்டாஸ், நாடாளுமன்றத் தாக்கு தல், உரி, புல்வாமா, பஹல்காம் போன்ற தொடர்ச்சியான பாது காப்புத் தோல்விகளை பட்டிய லிட்டார். புல்வாமா சம்பவத்தை “சுதந்திர இந்தியாவின் வரலாற் றில் மிகப்பெரிய பாதுகாப்பு தோல்வி” என்று வர்ணித்தார். 2008 மும்பை தாக்குதலுக்குப் பிறகு அப்போதைய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், மகா ராஷ்டிர முதலமைச்சர் விலாஸ் ராவ் தேஷ்முக், துணை முதல மைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் ஆகி யோர் ராஜினாமா செய்த வர லாற்றை நினைவுபடுத்திய அவர், “இப்போது பஹல்காம் நிகழ்வுக் காக ஒருவர் கூட ராஜினாமா செய்ய வில்லை” என்று கண்டித்தார். “உள்துறை அமைச்சருக்கு பிடித்த இதழான ‘ஓபன் மேகசின்’ அமித் ஷாவை இரண்டாவது சர்தார் படேல் என்று சித்தரித்திருந்தது. அமித் ஷாவை தார்மீக ரீதி யாக சிவராஜ் பாட்டீலை விட தாழ்ந்தவர் என்று வரலாறு தீர்ப்ப ளிக்குமா?” என்று கிண்டலுடன் கேட்டார். பஹல்காம் சாட்சியங்கள் மீதான கிண்டல் “பஹல்காம் பயங்கரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டதாக கூறியிருக்கிறீர்கள். நாங்கள் உங்களை நம்புகிறோம். இதற் கெல்லாம் எந்த சாட்சியமும் தேவை இல்லை” என்று கிண்டலா கக் கூறிய அவர், “தேர்தல் ஆணை யமே அடையாள அட்டையை நம்பாத நிலையில், பாகிஸ்தான் சாக்லேட் போன்ற சான்றுகளைக் கொண்டுவராதீர்கள்” என்று தெரிவித்தார். சீனா முரண்பாடும்  யுத்த வெறியும் “இப்போதுதான் நீங்கள் சீன அரசுக்கு பிடித்தமானவர்களாகி விட்டீர்களே! இறக்குமதி இரு மடங்கு! வர்த்தகப் பற்றாக்குறை இரு மடங்கு! ஆனாலும் சீனாவின் நண்பர்கள் என்று எங்களை குற்றஞ்சாட்டுகிறீர்கள்” என்று விமர்சித்தார். “யுத்தம் எப்போ துமே தீர்வாகாது. மகாபாரதப் போரின் முடிவில் தர்மபுத்திரன் ஒரேயொரு நாயை மட்டுமே பெற்றி ருந்தார்” என்று மகாபாரத உவமை மூலம் யுத்தத்தின் விளைவுகளை தெரிவித்தார். ஊடகங்களின் யுத்த வெறியை விமர்சித்த அவர், “ரிபப்ளிக் சேன லில் ராவல்பிண்டி கைப்பற்றப் பட்டது. ஜீ டிவி இஸ்லாமாபாத் தைக் கைப்பற்றியது. இந்தப் பிர தேசங்களை அவர்களிடம் திருப்பிக்கொடுத்துவிட்டீர்களா?” என்று கேட்டார். மோடியின் ‘டிரம்ப் பயம்’ “நேற்றைய தினம் மோடி அளித்த பதில் ஒரு மணி 45 நிமி டங்கள் நீண்டது. அதில் ஒரு வார்த்தைகூட டொனால்டு டிரம்ப் குறித்து பேசவில்லை. அவர் பயப் ்படுகிறார்” என்று கூர்மையாக சுட்டிக்காட்டினார்.  சிறுபான்மையினர்  மீதான தாக்குதல்கள் கடந்த ஆண்டு மட்டும் கிறிஸ்த வர்கள் மற்றும் சிறுபான்மைக் குழுக்கள் மீது 824 தாக்குதல்கள் நடைபெற்றதாக தெரிவித்த அவர், கேரள கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்க ரில் சிறையில் அடைக்கப்பட்ட சம்ப வத்தை விரிவாக எடுத்துக் காட்டினார். “அவர்கள் ஆபத்தான கிரிமினல்களுடன் வைக்கப்பட்டார் கள்” என்று கூறிய அவர், “புல்டோ சர்களால் முஸ்லிம்களின் வீடுகள் இடிக்கப்படும்போது, நர்சை சிறையில் அடைக்கும்போது, நம்  வெளியுறவுக் கொள்கையில் அவ மானகரமான தாக்கத்தை ஏற் படுத்தும்” என்று எச்சரித்தார். காசா மற்றும் ஈரான் தாக்குதல்க ளின் போது அணிசேராநாடுகளின் தலைவராக உள்ள இந்தியா வாயை மூடிக்கொண்டிருந்ததை “அவமானம்” என்று வர்ணித்த அவர், “ஏன் வாக்களிக்காமல் இருந்தீர்கள்?” என்று கேட்டார். ‘ஆட்டின் தோல்  போர்த்திய ஓநாய்கள்’ சில அரசியல் தலைவர்களின் இரட்டை நிலைப்பாட்டை விமர் சித்த அவர், “கேக்குகளுடன் பிஷப் மாளிகைகளுக்கு வரும் தலைவர் கள், கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடக்கும்போது அமைதியாக இருக்கிறார்கள். இந்த பாசாங்குத் தனம் கேரள மக்களுக்குப் பிடிக் காது. இவர்கள் ஆட்டின் தோல் போ ர்த்திய ஓநாய்கள் போன்றவர்கள்” என்று எச்சரித்தார். மத மாற்ற குற்றச்சாட்டை மறுத்த அவர், “நட்டா, பியூஷ் கோயல், நிர்மலா சீத்தாராமன், ஜெய்சங்கர் கிறிஸ்தவப் பள்ளிகளில் படித்தும் இந்துக்க ளாகவே இருக்கிறீர்கள். இது கிறித்தவ நிலையங்கள் மத மாற்ற  மையங்கள் அல்ல என்பதை நிரூபிக்கிறது” என்று தர்க்கரீதியாக பதிலளித்தார். “அர்ப்பணிப்பு மிக்க கன்னியாஸ்திரிகள் சுகாதா ரம், கல்வி, சமூக முன்னேற்றத் திற்கு அளப்பரிய பங்களிப்பு செய்திருக்கிறார்கள்” என்றும் பாராட்டினார். உலகளாவிய இந்தியப் பிம்பம் “இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நம் குடிமக்களை, குறிப்பாக சிறுபான்மையினரை நாம் எவ்வாறு நடத்துகிறோம் என்பதால் வடிவமைக்கப்படு கிறது” என்று வலியுறுத்திய அவர், “வளர்முக நாடுகளின் தலைவராக உள்ள இந்தியாவின் அந்தஸ்தை  நீர்த்துப்போகச் செய்துவிடாதீர் கள்” என்று முறையீடு விடுத்தார். டாக்டர் ஜான் பிரிட்டாஸின் இந்த உரை மோடி அரசின் பல்வேறு கொள் கைகள் மீது கூர்மையான கேள்வி களை எழுப்பியுள்ளது.   (ந.நி)