states

img

தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் காவல்துறையினருக்கு விடுமுறை ரத்து

தீவிரமடையும் மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் காவல்துறையினருக்கு விடுமுறை ரத்து

மராத்தா இடஒதுக்கீட்டை வலியு றுத்தி சமூக ஆர்வலர் மனோஜ் ஜராங்கே மும்பையின் (மகா ராஷ்டிரா தலைநகர்) ஆசாத் மைதா னத்தில் வெள்ளிக்கிழமை அன்று மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போ ராட்டத்தை தொடங்கியுள்ளார். இட ஒதுக்கீட்டை அரசு வழங்கும் வரை போ ராட்டத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என அவர் மகாராஷ்டி ரா பாஜக கூட்டணி அரசுக்கு எச்சரிக்கை  விடுத்துள்ளார். மனோஜ் ஜராங்கே வுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் ஏரா ளமானோர் மும்பையில் கூடியுள்ளதால் மும்பை நகரமே ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில், மராத்தா போராட் டத்தைத் தொடர்ந்து மும்பையில் அனை த்து காவல்துறையினரின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சனிக்கிழமை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக செய்தி கள் வெளியாகின.