ஒரு காலத்தில் சிந்தனையாளர்கள் மற்றும் உலகத்தைப் பற்றி கனவு காணும் நாட்டில் இரண்டு ஆர்வம் உள்ள நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். ஒருவரின் பெயர் யதார்த்தம் மற்றொருவரின் பெயர் மாற்றம்.
யதார்த்தம் நடைமுறைக்குரிய விஷ யங்களை பேசுவார். உலகம் பொருளால் ஆனது என்று சொல்வார்.அவர் நாம் பார்க்கக்கூடிய மற்றும் உணரக்கூடிய மரங்கள், ஆறுகள், பாறைகள், மக்கள் மற் றும் இயந்திரங்கள் எல்லாம் பொருளால் ஆனது. கருத்துக்கள் மக்கள் மனதில் இருந்து வருகிறது. அந்த மனம் மூளையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. எனவே எல்லாம் பொருள் உலகத்திலிருந்து தொடங்குகிறது என்பதை யதார்த்தம் விளக்குவார். மறுபுறம் மாற்றம் நண்பர், எல்லாம் எவ்வாறு பரிணமித்தது, ஒரு சிறு விதை எவ்வாறு மரமாக மாறியது, குழந்தைகள் எவ்வாறு பெரியவர்களாக வளர்ந்தார்கள், பழைய சமூகம் எவ்வாறு வீழ்ச்சி அடைந்தது, புதிய சமூகம் எப்படி உருவானது என்பதை கவனிப்பவர். அவர் உலகில் உள்ள அனைத்து மோதல்களும், முரண்பாடு களும் தான் வளர்ச்சிக்கு காரணம் என்று நம்பு வார். ஆக எல்லாம் அப்படியே இருக்காது; போராட்டங்கள் எல்லாவற்றையும் மாறச் செய்கின்றன என்று நம்பிக் கொண்டு செய லாற்றுபவர். ஒரு நாள் யதார்த்தம், மாற்றம் ஆகிய இருவரும் காரல் மார்க்ஸ் என்ற சிந்தனை மிக்க நண்பரை சந்தித்தனர். அவர்கள் இரு வரின் உரையாடல்களையும் கேட்டு புன்முறு வல் பூத்தார். நீங்கள் இருவரும் சொல்வது சரிதான். நீங்கள் இருவரும் உலகை புரிந்து கொள்ளவும், விளக்கவும் உதவுகிறீர்கள் என்றார்.அவர் இந்தஒற்றுமையை இயங்கி யல் பொருள் முதல்வாதம் என்று சொன் னார். அவர்கள் இருவரையும் பார்த்து மார்க்ஸ் யதார்த்தம் சொல்வது போல் இந்த உலகம் கற்பனையால் அல்லது கட வுளால் வடிவமைக்கப்பட வில்லை. அது உண்மையாக பௌதீக விஷயங்களால் அதாவது நிலம், கருவிகள், உழைப்பு, தொழிற்சாலைகள், உணவு போன்றவை களால் வடிவமைக்கப்படுகிறது என்றார். அதே சமயம் மாற்றம் சொல்வது போல் இந்த உலகம் உறைந்தது அல்ல. அது தொடர்ந்து மோதலின் மூலம் மாறுகிறது. மரங்கள் சூரிய ஒளிக்காக போட்டியிடும் போது காடுகள் வளர்வது போல், வெப்பம டையும் போது தண்ணீர் கொதிப்படைவது போல், எதிரெதிர்கள் மோதும் போது முன் னேற்றம் நிகழ்கிறது என்பது உண்மை. இதைத்தான் நான் வரலாற்றைப் பார்த்து வர்க்கங்களின் போராட்டமாக கண்டேன் என்றார் மார்க்ஸ். அந்தப் போராட் டம் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தொழிலாளர் களுக்குமாக இருக்கிறது. அதாவது ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஒரு விதமாக இருந்தது. அரசர்கள் மற்றும் விவசாயிகளுக்கான தாக, பிரபுக்கள் மற்றும் அடிமை களுக்கானதாக, முதலாளி மற்றும் தொழி லாளிக்கானதாகவும் இருந்தது. ஒவ்வொரு முறையும் மோதல்கள் உலகை முன்னோக்கி தள்ளுகிறது. அடி மைத்தனத்திலிருந்து நிலப்பிரபுத்துவத்திற் கும், பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்து வதற்கும்,முதலாளித்துவத்திலிருந்து இருந்து சோசலிசத்திற்கும் மாறும்! இரண்டு நண்பர்களுக்கும் புரிந்தது இந்த விளக்கம். உலகைப் பார்க்க ஒரு புதிய லென்ஸ் இயங்கியல் பொருள் முதல் வாதம் உலகைப் பார்க்க ஒரு கருவியாக மாறியது. இந்த மாய லென்ஸ் மக்கள் புரிந்து கொள்ள உதவியது. முரண்பாடுகள் எப்போதும் வரலாற்றை முன்னோக்கி செலுத்துவதால் மாற்றம் தவிர்க்க முடியாததாக மாறுகிறது. லெனின், மாவோ மற்றும் புரட்சி யாளர்கள், சிந்தனையாளர்கள் இந்த லென்ஸை கையில் எடுத்தனர்.இயங்கியல் பொருள் முதல் வாதம் மூலம் உலகைப் புரிந்து கொண்டு மாற்ற முடியும் என்று நம்பினர். அவர்களின் முயற்சிகள் வெற்றி பெற்றன. இதை புரிந்து கொள்வது உலகை மாற்ற முதல் படியாகும்.