குடியரசுத் துணை தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நல்ல வரவேற்பு அளிக்கப்பட்டது. இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் நாங்கள் (“இந்தியா” கூட்டணி) வெற்றி பெறுவோம் என 100% நம்பிக்கை உள்ளது.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ்
வாக்காளர் உரிமை யாத்திரையில் சேர நான் பீகார் சென்றேன். யாத்திரையை ஆதரித்ததற்காக பீகார் மக்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். பீகாரின் குரல் நாடு முழுவதும் ஒலிக்கிறது. இந்த முறை பாஜக பீகாரிலிருந்து வெளியேறப் போகிறது. அது நிச்சயம்.
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி
பீகாரில் வாக்குத் திருட்டிற்கு எதிராக நடைபெறும் வாக்காளர் உரிமை யாத்திரையைப் பார்த்து பாஜக பயத்தில் உள்ளது. பாஜக என்னதான் முயற்சி செய்தாலும் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி பீகாரில் ஆட்சிக்கு வராது. அதற்கு வாய்ப்பும் இல்லை.
மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி
கனமழை வெள்ளம், மேகவெடிப்புகள், நிலச்சரிவு உள்ளிட்டவை ஜம்மு-காஷ்மீரில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன. பல உயிர்கள் பலியாகின. வீடுகள், உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளன. பலர் குடும்பங்களை இழந்து தவிக்கின்றனர். பேரழிவுகளால் ஏற்பட்ட சேதங்களைக் கருத்தில் கொண்டு ஒன்றிய அரசு நிவாரண தொகுப்பை வழங்க வேண்டும்.