articles

img

சிறுகதைக்கான கதைக்களம் - கா சுவேலாயுதன்

சிறுகதைக்கான கதைக்களம் - கா சுவேலாயுதன்

நீங்கள் பேருந்தில் பயணம் செய்கிறீர்கள். ஜன்னலோர இருக்கையில் அமைதியின் வடிவாய் அமர்ந்திருக்கிறார் ஒருவர். அவர் அருகில் அமர்கிறீர்கள்.  அவரிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை. அவ ரின் அமைதியும், திருவுருவமும் உங்கள் நெருக்க மான உறவுக்காரர் ஒருவரை ஒத்திருக்கிறது. அவரையும், இவர் பயணத்தையும் ஒப்பிட்டு கற்பனை சிறகடிக்கும் போது உங்களுக்குள் ஒரு சுவாரஸ்ய சம்பவம் உருவாகலாம்.  அநேகமாக அதுவே அற்புதமான கதைக்  கான உள்ளடக்கமாக உங்களுக்கு அமையலாம்.  சரி. அவர் அமைதியாக இல்லை. கஜக், முஜக் கென்று வெற்றிலை பாக்கை மெல்லுகிறார்.  சிவந்த நாக்கை நீட்டி ஒரு குப்பியிலிருந்து சுண்ணாம்பு களிம்பை ஆள்காட்டி விரலில் ஓர்  இழுப்பு இழுத்து, நாக்கில் தடவி மறுபடி அஜக்  முஜக் செய்யலாம். அடிக்கடி நாக்கை நீட்டி சிகப்புப் பார்க்கலாம்.  கூடவே ஒரு காய்ந்த புகையிலையை எடுத்து  முறித்து கடைவாயில் இட்டு அதக்கி, ஜன்ன லுக்கு வெளியே எச்சிலை துப்புபவராக இருக்க லாம். பின் சீட்டில் இருப்பவர், ‘யோவ் பெரிசு சும்மா துப்பாதே. என் மூஞ்சியிலயே எச்சில் படுது ‘  என எரிச்சலுடன் கூவலாம்.  இங்கே வெற்றிலை மென்று துப்பும் மனிதன்  கதை நாயகனோ, வில்லனோவாக மாறலாம்.  பின் சீட்டுக் காரர் நீங்களாக மாறி கதை மாந்த னாக உருப் பெறலாம். . பக்கத்து சீட்டில் தூங்கி வழிந்து, வாயைத் திறந்து ஜொள்ளு விடுதலில், அந்த எச்சில் சொய்ய்... என்று காற்றில் பறந்து வந்து உங்கள் மீது அடிக்கலாம்.  அதில் எழுந்த ஆத்திரமும், உணர்வுப் பீறிட லும் கூட ஒரு கதைக்கான உள்ளடக்கமாகவும் இருக்கலாம்.  சரி. டிக்கெட் டிக்கெட் என்று கூவிக் கொண்டு  மனிதக் கசகசப்பில் நுழைந்து நுழைந்து வெளியே வரும் கண்டக்டர், சைடு சீட்டில் உள்ள  இளம் பெண்ணை சைட் அடித்துக் கொண்டே ராக்கெட் வேகத்தில் பஸ் ஓட்டும் டிரைவர், அவர்  அடிக்கடி அடிக்கும் ஹார்ன் சத்தம், ஒரு கையால்  குழந்தையை தூக்கிக் கொண்டு, மறு கையால்  கம்பியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு பய ணம் செய்யும் தாய், பக்கத்து சீட்டில் தூங்குவது  போல் பாசங்கு செய்யும் நடுத்தர வயதுக்காரர்,  ‘கைப் புள்ளக்காரி. எளந்தாரிக எந்திரிச்சு எடம்  விட்டாத்தான் என்ன?’ என்று எரிச்சலுடன் பேசும்  பெண்மணி, அடுத்த சீட்டில் அமர்ந்திருக்கும் புது  மணத் தம்பதியில் மணமகனாகப்பட்ட இளை ஞன் எழுந்து தாய்க்கு இடம் விடப்போக, அவ னின் கையைப் பிடித்து காதலுடன் அல்லது காம  தாபத்துடன் இழுத்து உட்கார வைக்கும் புதுப்பெண்...  இப்படி எல்லோருக்குள்ளும் கதை இருக்கி றது. அக்கதைக்கான உள்ளடக்கம் இருக்கிறது.  நீங்கள் இன்னும் கொஞ்சம் கதைக் களத்திற்  கான உள்ளடக்கத்தில் கரைய வேண்டுமானால் மேற்சொன்ன கேரக்டருக்குள் எல்லாம் நீங்களே  கூடு விட்டு கூடு பாய்ந்து வீட்டீர்களானால் நீங்கள்  ஓர் அற்புதமான கதாசிரியராக, ஒரு கதையின் உள்ளடக்கத்தை சிரசில் ஏந்தியவர்களாக மாறி  விட்டீர்கள் என்று அர்த்தம்.  பஸ் பயணம் என்றில்லை. கிளினிக், தனியார் ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரி, திரு மணம், பெண்ணுக்கு சீமந்தம், ருதுமங்கள சீர்,  மண்டபம், கல்யாண வீடு, மாப்பிள்ளை அழைப்பு, விநாயகர், முருகர், மாரியாத்தா கோவில், திருவிழாக்கள். அரசு விழாக்கள். வி.ஐ.பிக்கள். அமைச்சர்கள், அதிகாரிகள், சினிமா தியேட்டர், சினிமா பிரபலங்கள் வருகை...  திரும்பின பக்கமெல்லாம் பல்லாயிரம் மனிதத் தலைகள்.  ஒவ்வொருவருக்குள்ளும் ஆயிரமாயிரம் எண்ணங்கள். எதிர்பார்ப்புகள். ஓட்டமாய் ஓடும்  உழைப்பு.  அவை எல்லாமே ஒவ்வொரு கதைக்கான உள்ளடக்கம் என்பேன். இவ்வளவு ஏன்? உங்கள்  வீட்டின் போர்டிகோவின் மேல் மூலையில் ஒரு  சிட்டு கூடு கட்டுகிறது.  காம்பவுண்ட் சுவற்றின் மீது கரிச்சான் வந்து அமர்ந்து கீச்சிடுகிறது. உங்கள் வீட்டுத் தொட்டிக்குள் சடசடத்து எங்கிருந்தோ வந்த பாம்பு விழுந்து விடுகிறது.  தினம்தோறும் சாப்பிடும் நேரத்திற்கு டாண் என்று வந்து அமர்ந்து ஒரு அண்டங்காக்கை கரைகிறது.  அடுத்த தெருவில் இருந்த வேப்பமரம்  வெட்டப்படுகிறது. சாலை விரிவாக்கத்தில் ஏராள மான புளிய மரங்கள் அப்புறப்படுத்துகின்றன.  நீங்கள் அன்றாடம் நடக்கும் சாலையில் உள்ள  ஒரு பெரிய ஆலமரத்தில் மாலை ஆறு மணி யானால் வந்து அடையும் பறவைகள். அவை எழுப்பும் விநோத சத்தங்கள்.  ஓர் இழவு வீட்டின் முன்புறம் நெருப்பு மூட்டி,  மத்தளம் தட்டி ஆடும் ஆட்டக்காரர்கள், சுடு காட்டில் வெட்டியானிடம் பேரம் பேசும் சொந்தங்கள், மின் மயானத்தில் வாய்திறக்கும் அடுப்பு, விநாடிப் பொழுதில் உள்ளே நகர்ந்து பஸ்பமாகும் உடல், அக்னிக் கதவு மூடினதும் ஒலிக்கும் ஜென்மம் நிறைந்தது என்ற வைரமுத்து பாடல்.  அமைதி காத்து மூடின கண்களுடன் உறவுக்காரர்கள். சிலரிடம் விம்மல் சத்தம்... சிலர் கன்னங்களிலோ தாரை தாரையாய் கண்ணீர்...  இங்கே.. இதில் எல்லா இடத்திலும் கதை கள்... கதைகள்தாம். அவற்றின் உள்ளடக்கம் சோகம், துயரம், கோபம், மகிழ்ச்சி, உற்சாகம் இப்படி பல வகை உணர்வுகளையும் கொண்ட தாக மாறலாம்.  அப்படியான உணர்வுகள் உங்களுக்குள் புறப்பட்டு பேரெழுச்சி கொண்டால் நீங்கள் சாட்சாத் கதாசிரியர் ஆகி விட்டீர்கள் என்றே அர்த்தம்... அத்தோடு நின்றதா கதை? இப் புவிப்பந்தின் மீது ஊர்வன, பறப்பன, கொசு முதல் வைரஸ் வரை, அமீபா முதல் பல லட்சம் ஆண்டுகள் முன் வாழ்ந்ததாக சொல்லப்படும் டைனோசர் வரை எல்லாமே கதைதான்.  கொசு சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட உயிர் கொல்லி கதைகள் என்றால் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகள் உலகையே உலுக்கி ஊரடங்கில் ஆழ்த்திய பிளேக், கொரோனா பயங்கரக் கதைகள். பூமிக்குள் இருக்கும் கனிமங்கள் முதல் நெபுலா குழம்பு வரை எல்லாம் கதைக் களம்  என்றால் பூமிக்கு வெளியே அண்ட வெளியில் சுற்றும் சூரிய சந்திர ஒன்பது கோள்களும், பிர பஞ்சத்தில் சுழலும் அத்தனை நட்சத்திரக் குடும்பங்களும் கற்பனைக்கு எட்டா கதை கள்தான்.  எங்கள் தலைமுறையில் இரும்புக்கை மாயாவி சுவாரஸ்யம் என்றால் சமகாலத்தில் ஏலியன்ஸ். எதிர்காலத் தலைமுறைக்கு எது எதுவோ மாறலாம். அப்படி ஒரு எதுவோவை நீங்கள் கற்பனை வளத்தில் சுண்டி விட்டு உருக்  கொடுத்தீர்கள் அதுவும் அற்புதமான தீர்க்கதரி சனக் கதைதான்... (முகநூலில் இருந்து)