வித்தியாசங்கள் - வல்லம் தாஜூபால்
கம்பருக்குப் பின்பலம் சடையப்ப வள்ளல் கவர்னருக்குப் பின்பலம் வடையப்ப வள்ளல் மனைவியிடம் ஒரு விஷயத்தை மறைத்தால் சாதாரணமானவர் தனக்கு மனைவி இருக்கும் விஷயத்தை மறைத்தால் பெரிய மனிதர் வலுவானது இந்தக் கூட்டணி வலுக்கட்டாயமானது அந்தக் கூட்டணி இது ஆதார் எண்போல் நிரந்தரம் அது ஓடிபி எண்போல் தற்காலிகம் உ.பி. பரப்பரளவில் பெரியது தமிழ்நாடு பகுத்தறிவில் பெரியது பில்லுக்கு டிப்ஸ் கேட்டால் சர்வர் பில்லுக்கு ஜிஎஸ்டி கேட்டால் சர்க்கார் உள்ளூர் வங்கியில் நீ கணக்கு வைக்க விரும்பினால் ஆசை ஸ்விஸ் வங்கியில் நீ கணக்கு வைக்க விரும்பினால் பேராசை சமதர்மமாய் எடைபோடுவது நீதித் தராசு மனுதர்மமாய் எடைபோடுவது வேதத் தராசு மோசடிகளை வெளிப்படுத்துவது விசாரணைக் கமிஷன் மோசடிகளை அமுல்படுத்துவது தேர்தல் கமிஷன் அறிவூட்டுவது இடதுசாரி வெறியூட்டுவது வலதுசாரி