2006 வரை இண்டர்நெட், டெலிவிஷன் போன்ற நவீன மாற்றங்களை பூடானின் முடியாட்சி அனுமதிக்கவில்லை. 2008 இல் தான் மன்னரின் விருப்பத்தோடு, அமைதி வழியில் நாடு ஜனநாயக முறைக்கு மாறுகிறது.
இதற்கு முன்னோட்டமாக, 2006-ல் வாக்குரிமை பற்றி மக்களுக்கு விளக்க, மாதிரி வாக்களிக்கும் முறையை (Mock Polling), அரசு நடத்துகிறது. இது சமூகத்தில் ஏற்படுத்திய சிறு, சிறு தாக்கத்தை, நாடகத் தன்மையோடு அரசியல் நையாண்டி செய்யும் படமே “துறவியும் துப்பாக்கியும்”. வானொலியில் விரைவில் நாடு ஜனநாயகத்திற்கு மாறுவதாக செய்தி வருகிறது. உ.ரா. என்ற மலைக் கிரா மத்தில், தவத்திலிருந்த பௌத்த துறவி லாமாவும், இச்செய்தியை கேட்கிறார். தவத்தை பாதியிலேயே முடிக்கி றார். சீடர் டாஷியிடம், பௌர்ணமிக்குள் இரண்டு துப்பாக்கி களோடு வரச் சொல்கிறார். அவரும் துப்பாக்கி தேடி வீடு வீடாகச் அலைகிறார். தேர்தல் அதிகாரி ட்ஷீயரிங், தனது குழுவோடு இக்கிரா மத்திற்கு வருகிறார்.சுதந்திரம்,சமத்துவத்தை ஊதா நிற மும்,தொழிற் வளர்ச்சியை சிவப்பு நிறமும்,சுற்றுச்சூழல் பாதுகாப்பை மஞ்சள் நிறமும் குறிக்கின்ற மூன்று கற்பனை யான கட்சிகளை ஊர் மக்களின் மனதில் பதிய வைக்கிறார். இக்கட்சிகளின் பிரதிநிதிகளை வாக்குச்சீட்டு மூலம் தேர்ந்தெடுக்கும் மாதிரி தேர்தல் முறையை ஊராரிடம் விளக்குகிறார். ஷோயஃபலும் அவன் மனைவியும் தேர்தல் அதி காரிக்கு உதவுகிறவர்கள். பள்ளி செல்லும் இவர்கள் மகள் யூபேல் உட்பட குடும்பத்தினர் ஒவ்வொருவரும் தேர்தலில் வெவ்வேறு வேட்பாளரை ஆதரிக்கின்றனர். இது குடும்பத்தில் பூசலை உருவாக்குகிறது. பழங்கால ரைபிள்களை (antique) உலகெங்கும் தேடி சேகரிப்பவன் ரோன்.அமெரிக்கனாகிய இவனும், உள்ளூர் வழிகாட்டி பென்ஜியும் ரைபிள் தேடி இக்கிராமத்திற்கு வருகிறார்கள். ஒரு விவசாயிடமிருந்து திபெத்தியப் போரில் பயன்படுத்திய அமெரிக்க ரைபிள் ஒன்றைப் பேரம் பேசி முடிக்கிறார்கள். அதற்குரிய டாலருக்காக வங்கிக்குச் செல்கின்றனர். இதற்கிடையில் அங்கு வரும் சீடர் டாஷி, துறவி லாமாவின் விசுவாசியான அவ்விவசாயிடமிருந்து, ரைபிளை இலவசமாகவே பெறுகிறான். ரைபிள் கைவிட்டு போனதை அறிந்த ரோன் குழு வினர்,சீடரைத் தேடி கண்டறிந்து ரைபிளை கேட்கின்றனர்.துறவி இரு துப்பாக்கிகள் கேட்டதால்,சீடன் இரு ஏகே47 துப்பாக்கிகளை கொடுத்தால் ரைபிளை தருவதாகக் கூறுகிறான்.அவர்களும் கள்ளச்சந்தையில் இரு ஏகே47 துப்பாக்கிகளை வாங்குகின்றனர். ரோன் ஒரு கள்ளத் துப்பாக்கி கடத்தல்காரன் என பூடான் போலீஸுக்கு இண்டர்போல் மூலம் தகவல் வரு கிறது. அவனைப் பிடிக்க போலீஸ் குழுவும் கிராமத்துக்கு வருகிறது. பௌத்த புனித இடமான ஸ்தூபாஸ் சிதிலம டைந்துள்ளது. இதனருகில் புதிய விகாரை கட்ட, பௌர்ணமி அன்று லாமா தலைமையில் ஊர் கூடுகிறது. சமயச் சடங்குகள் நடைபெறுகிறது. சீடர் அமெரிக்க ரைபி ளோடும், சீடரைத் தேடி ரோன் ஏகே47 துப்பாக்கிகளோடும், ரோனைத் தேடி பூடான் போலீஸ் குழுவும்,மாதிரி தேர்தலை முடித்த கையோடு தேர்தல் அதிகாரி, அவருக்கு உதவிய குடும்பமும் ஒருங்கே அவ்விடத்தில் குழுமு கின்றன. அடுத்து.... தேர்தல் அதிகாரி,சீடரிடம் தேர்தல் பற்றி விளக்குகை யில், “எலக்ஷன் என்பது புது வியாதியின் பெயரா?” என அவன் முந்திக்கொண்டு அப்பாவியாகக் கேட்பதும், வாக்காளராகப் பதிய வரும் மக்களிடம் வயது பற்றி கேட்கையில், மன்னர் பிறந்த நாளை அடிப்படையாக வைத்து உத்தேசமாக வயதை சொல்வதும் மக்களின் அப்பாவித்தனத்தைச் சொல்லும் நகைச்சுவைக் காட்சிகள். மூன்று நிறக் கற்பனை கட்சிகளில்,மஞ்சள் நிறக்கட்சியே மாதிரி தேர்தலில் 98% வாக்குகள் பெறு கிறது.மன்னருக்கு பிடித்த நிறம் மஞ்சள் என்பதால்தான், இக்கட்சி வெற்றி பெற்றுள்ளது என்பது தேர்தல் அலுவல ருக்கு தெரிய வருகிறது. மன்னர் மீதான அப்பாவி மக்களின் குருட்டு பக்தியை இது போன்ற காட்சிகள் பகடி செய்கின்றன. ஒரு அமைப்பை அகற்றி, அவ்விடத்தில் புது அமைப்பை உருவாக்குதே மாற்றம். இங்கு மக்கள், மாற்றம் குறித்த எவ்விதப் புரிதலுமின்றி உள்ளனர். மன்னரின் அரசே மாற்றத்தைக் கட்டமைக்கிறது. மாணவி யூபே லுக்கு தேர்தல் அதிகாரியால் பரிசாக வழங்கப்பட்ட அழிப்பானை, மாதிரி தேர்தலை முடித்த கையோடு, ஊருக்கு திரும்பும் அதிகாரியிடமே அவள் திருப்பி கொடுக்கிறாள்.இதன் மூலம், அழிப்பான் ஒரு உருவகமாக முன் நிறுத்தப்பட்டுள்ளது. படத் துவக்கத்தில் சீடர் டாஷி கேஸ் நிரம்பிய சிலிண்ட ருடன் மலையேறுகிறான்.இறுதியில் காலியான சிலிண்ட ருடன் மலையிலிருந்து கீழே இறங்குகிறான்.இங்கு கேஷ் சிலிண்டர் நவீன மாற்றத்திற்கான படிமமாக உணர்த்தப்படு கிறது. அமெரிக்கா பாலியல் தாராளமயம் மற்றும் ஆயுதக் கலாச்சாரம் கொண்ட நாடு. அந்நாட்டைச் சேர்ந்த ரோனுக்கு ஒரு மரத்தால் செதுக்கப்பட்ட லிங்க வடிவத்தைத் துறவி லாமா,பரிசாகக் கொடுக்கிறார்.படைப்பு,வளர்ச்சி, விடுதலை ஆகியவற்றின் அடையாளமாக பூடானில் லிங்கத்தை நம்புகிறார்கள்.இங்கு அமெரிக்காவின் உருவ கமாக ஆயுதக்கடத்தல்காரன் ரோன் சித்தரிக்கப்பட் டுள்ளான். பசுமையான பரந்து விரிந்த அமைதி தழும்பும் அழகிய மலை நிலங்களும் புல்வெளிகளும் கதா பாத்திரங்களில் ஒன்றாக வருகிறது. அழகிய நீலவானின் கீழ் இக்காட்சி கள் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மன துக்கு இதமான பூடானிய பாரம்பரியப் பின்னணி இசை. நடித்த கதாபாத்திரங்கள் செயற்கையான தொனி எங்கும் தெரியாவண்ணம், தெளிவான நடிப்பைத் தந்துள்ள னர். பல வாழ்க்கைச் சூழலிலுள்ள கதாபாத்திரங்களை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒன்றோ டொன்று இணைக்கும் “ஆல்ட்மன்-பாணி”(Altman-esque) இல் திரைக்கதை எதார்த்தமாக அமைக்கப்பட்டுள்ளது;படம் நெடுக, நகைச்சுவை இழையோடுகிறது; குறிப்பாகப் புவிசார் அரசியலை நையாண்டி செய்வதோடு சிந்திக்க வைத்துள்ளார் இயக்குநர் பவோ ஜோயினிங் டோர்ஜி. வன்முறை புதையுண்டால் அமைதி மலரும் என்று படத்தில் துறவி நம்புகிறார்.இதனை செயல்வடிவமாக்க ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது என்ற எதார்த்த வரிகளோடு படத்தை முடிக்கிறார் இயக்குநர். முபி யில் உள்ள இப்படம்,2023 டொரண்டோ உலகத் திரைப்பட விழாவின் அலுவலகப் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளது.