states

img

வாக்காளர் உரிமை யாத்திரையில் அகிலேஷ்

வாக்காளர் உரிமை யாத்திரையில் அகிலேஷ்

பீகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டை கண்டித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தள கட்சித் தலைவர் தேஜஸ்வி தலைமையில் “இந்தியா” கூட்டணி கட்சியினர் மாநிலம் முழுவதும் நடை மற்றும் வாகன யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்த யாத்திரைக்கு பீகார் மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் சனிக்கிழமை அன்று  உத்தரப்பிரதேச எதிர்க்கட்சித் தலைவரும் சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ், ராகுல் காந்தி, தேஜஸ்வி உடன் வாக்காளர் உரிமை யாத்திரையில் பங்கேற்றார்.